விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி*  உன்திருஉடம்புஅசைய*  
    தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்*  தொண்டரோர்க்கு அருளி*
    தடம்கொள் தாமரைக்கண்விழித்து*  நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்* 
    இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்*  திருப்புளிங்குடிக்கிடந்தானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உன் திரு உடம்பு அசைய – உன் திருமேனி நோவ
எத்தனை காலம் கிடத்தி – இன்னு மெத்தனை காலம் சயனித்திருப்பாய்
தொடர்ந்து குற்றவேல் செய்து – நிரந்தரமான நித்ய கைங்கரியஞ் செய்து
தொல் அடிமை வழிவரும் தொண்டரோர்க்கு அருளி – அநாதியான அடிமைவழியிலே அக்வயித் திருக்கின்ற அடி யோமுக்கு அருள் செய்து
தடம் கொள் தாமரை கண் விழித்து – (உனது) விசாலமான தாமரைக் கண்களைப் பார்க்க விழித்து

விளக்க உரை

தொடர்ந்து குற்றவேல் செய்து தொல்லடிமை வழிவருந் தொண்டராம் ஆழ்வார். எம்பெருமான் போமிடமெடங்கும் இளையபெருமாளைப் போலே கூடவே திரிந்து 'இந்த நிலைமையில் இன்ன கைங்கரியம் செய்ய வேணும், இந்த நிலையில் இன்ன கைங்கரியம் செய்ய வேணும்' என்று அந்தாங்கவடிமைகளைச் செய்து ஆத்மாவுக்கு ஸ்வாபாவிமாக அடிமையில் நின்றும் வழுவாதிருப்பவர் என்க. இப்படிப்பட்ட தொண்டரான தமக்கு அருள் வேணுமெனறு இரண்டாமடியால் பிரார்த்திக்கிறபடி. அருள் செய்ய வேண்டும் ப்ராகாரத்தைப் பின்னிரண்டடிகளால் விளக்குகிறார். தடங்கொள் தாமரைக்கண் விழிக்க வேணும், எழுந்திருக்க வேணும்; கைங்கரியங் கொள்ளுகைக்குத் தாமரைமங்கையோடு கூட விருக்க வேணும் என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றியருளும் வியாஜத்தினால் மூவுலகுந்தொழ வீற்றிருந்தருள வேணும் என்றிரக்கிறார். அர்ச்சாவதாரநிலை என்றைக்குமொருபடிப்பட்டே யிருக்கு மென்பதும் அது குலைக்க வொணணுததென்பதும் ஆழ்வாரறியாததன்று : அறிந்து வைத்தும் "நீ யெழுந்து–இருந்தருளாய்" என்று பிரார்த்திக்கிறார் – திருமழிசைப்பிரான் திருக்குடந்தையாராவமுதன் பக்கலிலே பிரார்த்தித்துப் பெற்றாரென்னும் ப்ரஸித்தியாலே *நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலமேனமாய், இடந்தமெய் குலுங்கவோ விலஞ்குமால் வரைச்சுரம், கடந்தகால பரந்த காவிரிக்கரைக் குடந்தையும் கிடந்தவாறு–எழுந்திருந்து பேசுவாழி சேகனே (திருச்சந்த விருத்தம்) என்ற பாசுரத்திலை திஹயமுணர்க.* அப்பாசுரத்தின் காயலாகவே யருளிச்செய்கிறார் கிடந்தநாள் கிடந்தாயெத்தனை காலங்கிடத்தி உன் திருவுடம்பசைய = கிடையழகு காணவேணுமென்று ஆசைப்பட்ட வொருவனுக்காகக் கண்வளர்ந்தருளினாய்; இனியொருவன் வந்து "கிடந்தவாறெழுந்திருந்து பேசு" என்றால் அதற்குப் பிறகும் கிடந்தருளலாமோ? எழுந்திருக்க வேண்டியதன்றோ. [உன் திருவுடம்பகைய எத்தனை காலங்கிடத்தி] இடம்பலங் கொள்ளாதே ஏகாகாரமாக நெடுங்காலம் சயனமே செய்தருளினால் சாலவும் சிரமமாயிராதோ? ஸுகுமாரமான திருமேனிக்குத்தகுமோவிது. என்றைக்கோ வொருவன் பிரார்த்திதானென்று அவனுடைய வேண்டுகோலையே பார்க்குமித்தனையோ? திருமேனியின் ஸெளகுமார்யத்தையும் அவனுடைய வேண்டுகோலையே பார்க்குமித்தனையோ? திருமேனியின் ஸெளகுமார்யத்தையும் அடியேன் போல்லாருடைய வேண்டுகோளையும் கணிசிக்க வேண்டாவோ? கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த காரியமாராய்ந்தருள் என்று வேண்டினால் அங்ஙனமே செய்தருள வேண்டாலோ?

English Translation

O Lord reclining in Tiruppulingudi! May the three worlds gather and worship you, You lie sleeping day after day, -how long!, - till your body sores. O Lord, hear your bonded serf of unbroken service petition to you; Pray open your lotus eyes and wake, and be seated with your dame Lakshmi

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்