விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குடிக்கிடந்து ஆக்கம்செய்து*  நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து*  உன்பொன் 
    அடிக்கடவாதே வழிவருகின்ற*  அடியரோர்க்கு அருளி*  நீஒருநாள்
    படிக்குஅளவாக நிமிர்த்த*  நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்* 
    கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை*  திருப்புளிங் குடிக்கிடந்தானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொடி கொள் பொன் மதிள் சூழ் – கொடிகளாலே அலங்காரங்கொண்ட பொன்மயமான மதிகாளலே சூழப்பட்டு
குளிர் வயல் சோலை – குளிர்ந்த வயல்களையும் பொழில் களையுமுடைத்தான
திருப்புளிங்குடி கிடந்தானே – திருப்புளிங்குடியிலே சயனித்தருளும் பெருமானே
குடி கிடந்து – ப்ரபந்நகுல மரியாதை வழுவாமலிருந்து
ஆக்கம் செய்து – குடியில் பண்டில்லாத நன்மைகளை யுண்டாக்கி

விளக்க உரை

உன் திருவடிகளை என் தலைமேல் வைத்தருளவேணு மென்று திருப்புளிங்குடிக் கிடந்தானைப் பிரார்த்திக்கிறார். முன்னிரண்டடிகளால் தம்முடைய சேஷத்வப் பெருமையைப் பேசிக் கொள்ளுகிறார். குடிக்கிடத்தல், ஆக்கஞ் செய்தல், தீர்த்தவடிமைக் குற்றவேல் செய்தல் இங்குச் சொல்லப்படுகிறது. குடிக் கிடத்தலாவது–குலமரியாதை தப்பாதபடி வர்த்தித்தல் பரதாழ்வான் தலையிலே முடியை வைக்கப்புக "இசஷ்வாரு வம்சத்தவர்களில் மூத்தாரிருக்க இளையார் மூடி குடிறயரியர்" என்றான் அவன். அப்படியே ஆழ்வாரும் தம்முடைய சேஷத்வத்தைக் காத்துக் கொள்ளும் விஷயத்தில் குலமரியாதை தவறாதவரென்க. ஆசார்ய ஹருதயத்தில் பரதாழ்வானோடு ஆழ்வார்க்கு ஸாம்யம் நிர்வஹிக்குமிடத்து "குடிக்கிடந்தகையறவும்" என்றருளிச் செய்ததுங் காண்க. ஆக்கஞ் செய்தலாவது–குடியில் பண்டில்லாத நன்மைகளை யுண்டாக்குகை. ஆசார்ய ஹருதயத்தில் (82) *ஜநக தசுரத வஸீதேவ குலங்களுக்கு மூத்த பெண்ணும் நடுவிற் விள்ளையும் கடைக்குட்டியும்போலே இவரும் பிறந்து புகழு மாக்கமுமாக்கி அஞ்சிறையுமறுத்தார்* என்று விடத்து ஆழ்வார்க்கு பரதாழ்வானோடே ஸாம்யம் நிர்வஹிக்குமிடத்து ஆக்கஞ் செய்தல் என்கிறவிது எடுத்துக் காட்டப்பட்டது. அவ்விடத்து வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகளின் திவ்ய ஸூக்தி வருமாறு – 'ஸ்ரீ பரதாழ்வான் பிறந்து' ராஜ்யஞ் சரஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்துமிஹார்ஹஸிஹ கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக: இத்யாதியாலே மூத்தாரிருக்க இளையார் முடிசூடக் கடவதன்றென்கிற குலமர்யாதையை நடத்தினவளன்றிக்கே, *ஐடிலம் சீரவஜநம் ப்ராஞ்ஜலிம் பதிதம் புவி* என்றும், *பங்கதிக்தஸ்து ஐடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீக்ஷதே* என்றும் சொல்லுகிறபடியே ஜ்யேஷ்டரான பெருமாளுடைய விச்லேஷத்தில் ஜடை புனைந்து வல்களையுடுத்து கண்ண நீராலுண்டான சேற்றிலே தரைக்கிடை கிடந்து குலத்துக்கு முன்பில்லாத ஏற்றத்தை யுண்டாக்கினாப் போலே ஆழ்வாரும் *குடிக்கிடந்து* என்கிறபடியே க்ஷத்வ குலமர்யாதை தப்பாதபடி னிற்நமாத்ர மன்றிக்கே, *ஆக்கஞ் செய்து* என்கிறபடியே சேஷி விரஹக்லேசாதிசயத்தாலே காண வாராயென்றென்று கண்ணும் வாயுந்துவர்ந்து, *கண்ண நீர் கைகளாவிறைத்து, *இட்ட காலிட்ட கையாம்படி நிச்சேஷ்டராய்த் தரைக்கிடைகடந்த ப்ரேமவிசேஷத்தாலே இக்குடிக்குப் பண்டில்லாத வேற்றத்தையுமுண்டாக்கினார்" என்று. நின் தீர்த்த படிமைக் குற்றவேல் செய்து–அடிமைக் குற்றேவலென்றும் தீர்த்த வடிமைக் குற்றேவலென்று மிரண்டுண்டு; எம்பெருமாள் திறத்துக் கைங்கர்யம் பண்ணுவது அடிமைக் குற்றேவல், அப்போது விஷயாந்தரங்களிலும் போக்யதாபுத்தி அநுவர்த்திருக்கவும் கூடும் ; அப்படியன்றிக்கே தன்னுடைய பரம போக்யதையாலே இதர புருஷார்த்தத்தில் நகையை அறவேயறுத்த அடிமைக் குற்றேவலுண்டு, அதற்குத் தீர்த்த வடிமைக் குற்றேவலென்று பெயர். தமாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு பரமாத்மநி யோரக்தோ விரபதோபரமாத்மநி என்னுமாபோலே, நாமும் சுதாசித் பகவத் விஷயத்திலே அடிமைக் குற்றேவல் செய்யா நின்றோமாகிலும் விஷயாந்தரங்களில் நசையும் கலசியிருக்கும். அவற்றைக் காரியுமிழ்ந்து செய்யும் குற்றேவலே தீர்த்த வடிமைக் குற்றேவேல். அதனை செய்து.

English Translation

O Lord reclining in Tiruppulingudi surrounded by golden walls and fertile fields! Through generations as bonded serfs, we have served your golden feet, never transgressing the limits of your holy domain. May your lotus feet-that-measured-the-Earth decorate our heads one day

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்