விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    யாதும்இல்லை மிக்குஅதனில்*  என்றுஎன்று அதுகருதி* 
    காதுசெய்வான் கூதைசெய்து*  கடைமுறை வாழ்க்கையும்போம்*
    மாதுகிலின் கொடிக்கொள்மாட*  வடமதுரைப்பிறந்த* 
    தாதுசேர்தோள் கண்ணன் அல்லால்*  இல்லை கண்டீர் சரணே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடை முறை வாழ்க்கையும் போம் – கடைகெட்ட ஸம்ஸார வாழ்க்கைக்கும் ஹானிவந்த தாமித்தனை(ஆன பின்பு)
மாதுகிலின் கொடிகாள் மாடம் – பெரிய த்வஜபடங்களைக் கொண்ட மாடல்களைக் புடைத்தான
வட மதுரை பிறந்த – வடமதுரையிலே வந்தவதரிந்த
தாது சேர்தோள்     கண்ணன் அல்லால் – மாலையணிந்த தோள்களையுடைய கண்ணனைத் தவிர்த்து
சரண் இல்லை கண்டீர் – வேறொரு புகலில்லை திடீர்

விளக்க உரை

எம்பெருமானைத் தவிர்த்து வெறொன்றை ரக்ஷகமாகப் பற்றினவர்கள் பண்டு நின்ற நிலையுங்கெட்டு அனர்த்தப்பட்டுப் போவர்கள்; அனபின்பு அவனல்லது புகலில்லை யென்கினறார். "நஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே, ஸமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம்" என்றும், ந ஹி பாலநஸாமர்த்த்யம்ருதே ஸர்வேச்வரம் ஹரிம் என்று முள்ள ப்ரமாணங்களை யறிந்துவைத்தும் இந்த அத்யவஸாயத்தை எம்பபெருமானளவிற் பண்ணுதே வேறொரு விஷயத்திற்பண்ணி, (அதாவது) அப்ராப்த விஷய மொன்றைப்பற்றி 'இதுவே நமக்கு ரக்ஷதம், இதனில் விஞ்சியராக்ஷகமில்லை' என்கிற அத்யவஸாயத்தை அவ்விஷயத்திலே கொண்டிருக்குமளவில். காது செய்வான் கூதைசெய்து கடைமுறை வாழ்க்கையும் போம் = கனங்குழையிடுவதற்காகக் காதைப்பெருக்கப்புகுந்து பண்டுள்ள யோக்யதையையுங் கெடுத்துக் கூறையாக்கிக் கொள்வாருண்டே; அப்படியாகி, தண்ணிதானமுறைமையாலே வாழக்கடவதான வாழ்வும் தொலைந்து போம். "ஸம்ஸாரத்திலே பசலுங்குட்டியுமாய் அனாய்குளாயாய்ப் போருமதுவுங்கூடக் கெடுமித்தனை" என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. கடைமுறை வாழ்க்கையாவது இவ்வாழ்வே: இதுவும் கெட்டுப்போமித்தனை உயர்ந்த ஜீவனத்தில் ஆசை கொண்டதற்குப் பயனாக அதமஜீவனமும் அழிந்து போமென்றபடி, "காது செய்வான கூதை செய்து" என்பது உபமானத்தையுட் கொண்ட வாக்யம். முன்னடிகட்கு மற்றொரு வகையான நிர்வாஹமுமுண்டு; அதாவது கைகல்ய பரமான நிர்வாஹமுமுண்டு; அதாவது கைவல்ய பரமான நிர்வாஹம்; கைவல்யஸுகத்தை விரும்பி இவ்வாத்மாநுபவ ஸுகத்திற்கு மேற்பட மற்றோரின்பமில்லை என்று துணிந்து அதற்கு க்ருஷி பண்ணுமளவில் முன்புள்ள ஸாம்ஸாரிக ஸுகத்தையுமிழக்குமித்தனை –என்று. இங்கே ஆறாயிரப்படி யருளிச்செயல் – "எல்லாவற்றிலும் மேற்பட்ட புருஷார்த்தமன்றோ ஸாம்ஸாரிக துக்கநிவ்ருத்திரூப கைவல்யமென்று அத்தைப் புருஷார்த்தமென்று பற்றில், காதுபெருக்க வென்றுபுக்குப் பண்டுள்ளதையுங் கெடுத்துக் கூதையாக்கினாப்போலே பண்டுள்ள ஸாம்ஸாரிக ஸுகத்தையுமிழக்குமித்தனை ஆதலால், ஸ்ரீமதுரையிலே திருவவதாரம் பண்ணுகையாலே புதுக்கணித்த வழகையுடையனான கண்ணனே பரமப்ராப்யனென்கிறார்" என்று. இப்பொருளில் "அது கருதி" என்றது கைவல்யோபாஸநத்தைப் பண்ணி யென்றபடி. அந்த ஹேயக்ருத்யத்தைத் தம்வாக்காலே சொல்லக் கூசி 'அது ' என்றதாகக் கொள்க.

English Translation

Those who pursue limited ends as if the infinite is not, -they only waste away their lives, alas! –like widening their ear-bore and losing their ear ring! So take refuge in the pennon-mansioned Mathura city's Lord

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்