விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாழ்தல்கண்டீர் குணம்இது அந்தோ!*  மாயவன் அடிபரவிப்* 
    போழ்துபோக உள்ளகிற்கும்*  புன்மைஇலாதவர்க்கு*
    வாழ்துணையா*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
    வீழ்துணையாப் போம்இதனில்*  யாதும்இல்லைமிக்கதே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

போழ்துபோ – காலசேஷபம்பண்ண வேறுமென்று
உள்ளகிற்கும் – நினைக்கவல்லவர்களான
புன்மை இல்லாவர்கக்கு – உத்தமாதிகாரிகளுக்கு
வாழ்துணை ஆ – வாழ்ச்சிக்த துணையாவதற்காக
வடமதுரை பிறந்தவன் – வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணனுடைய

விளக்க உரை

கண்ணபிரான் திருவவதாரம் செய்தது எதற்காக? என்றொரு கேள்வி பிறப்பதுண்டு ; பகவத் கீதையில் சுபரித்ராணுய ஸாதூநாம் விநாசாய சதுஷ்க்ருதாம், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே என்று அவன்தாநே பணித்திருப்பதைக் கொண்டு அக்கேள்விக்கு விடை கூறுவதுண்டு. சிஷ்டரக்ஷணமோ துஷ்டசிக்ஷணமோ தர்மஸ்தாபனமோ இலை ஸங்கல்பமாத்ரத்தாலே ஸாத்யமாகாதோ? இவற்றுக்காக நேரில் வந்து பிறக்க வேணுமோவென்று கேட்பதுண்டு; துஷ்ட நிரஸனம் ஒருகால் ஸங்கல்ப ஸாத்யமானாலும் ஸாதுபரித்ராணம் ஸங்கல்பத்தினால் ஸாத்யமாகாதென்றும், நேரே வந்து அவதரித்தே அது செய்யத்தக்கது என்றும் அந்தரதிகாண ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி யருளிச் செய்துள்ளார். அதற்கு மூலமாக அருளிச் செயல்கள் பலவுண்டு; அவற்றுள் இந்தப் பாசுரமுமொன்று– அதற்கு மூலமாக அருளிச் செயல்கள் பலவுண்டு; அவற்றுள் இந்தப் பாசுரமுமொன்று. இதில் மூன்றாமடியில் "வடமதுரைப் பிறந்தவன்" என்று ப்ரஸ்தாவிக்கப்படுகிற அவதாரத்திற்கு ப்ரயோஜனம் கூறுவது முற்பகுதி. "மாயவனடிபரவிப் போழ்து போகவுள்ளகிற்கும் புன்மையிலாதவர்க்கு வாழ்துணையா" என்பது அவதாரஹேது சொல்லுகிறபடி. இவ்வாழ்வார் தாமே பெரிய திருவந்தாதியில் கார்கலந்த மேனியான கைகலந்த வாழியான் பார்கலந்த வல்லயிற்றான் பாம்பணையான் சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையயினாழ் துயரை, என்னினைந்து போக்கு வரிப்போது" என்றார். பகவத் குணங்கள் மலிந்திருக்கப்பெற்ற ஸ்ரீராமாயண ஸ்ரீபாகவ தாதிகளைக் கொண்டு போது போக்க முடியுமே தவிர மற்ற எதனாலும் போதுபோக்க முடியாதென்றார் ஆழ்வார் தம்மியல்வுகொண்டு, அவ்விதமாகப் போதுபோக்க விரும்புமலர்களே "பரித்ராணாய ஸாதுநாம்" என்கிற த்லோகத்தில் சொல்லப்பட்ட ஸாதுக்கள்: அவர்களைப் பரித்ராணம் செய்வதென்றால் அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதேயாம். எம்பெருமான் திருவலதாரஞ் செய்து தனது திருக்குணங்களைக் காட்டியருளாதொழியில் சீர்கலந்த சொற்கள் தோன்றமாட்டா; அவை தோன்றவில்லையாகில் அவற்றைக் கொண்டே காலசேஷபம் பண்ணவிருக்கும் ஸாதுங்களின் பரித்ராணம் வித்திக்கமாட்டாது. ஆகவே, மாயவனடி பரவிப் போழ்து போகவுள்ளகிற்கும் புன்மையிலாதவர்க்கு வாழ் துணையாவதற்கு வடமதுரைப் பிறந்தானாயிற்று. அப்படிப்பட்டவனுடைய திருக்கல்யாண குணங்களையே விரும்பத்தக்க துணையாகப் பற்றும தொழிய வேறொரு நலமுமில்லை யென்றாராயிற்று.

English Translation

A life time spent in worshipping the feet of Krishna is good. Alas, there could be nothing greater than singing his praise. The Lord was born in Northern Mathura city to protect us pure-hearted devotees, who desire him alone

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்