விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!*  உள்ளது நினையாதே* 
    தொல்லையார்கள் எத்தனைவர்*  தோன்றிக் கழிந்தொழிந்தார்?*
    மல்லை மூதூர்*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
    சொல்லிஉய்யப் போகல்அல்லால்*  மற்றொன்றுஇல்லைசுருக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மல்லை மூதூர் வடமதுரை – செல்வம் மிகுந்த புராதனமான வடமதுரையிலே
பிறந்தவன் – வந்து பிறந்து கண்ணபிரானுடைய
வண் புகழே சொல்லி – உதாரமான திருக்குணங்களையே கீர்த்தனம் பண்ணி
உய்ய போகில் அல்லால் – உஜ்ஜீவித்துப் போமதொழிய
சுருக்கு – சுருங்கச் சொல்லும் வழி

விளக்க உரை

எம்பெருமானே பரமபுருஷார்த்தம் என்பதுணராதே முன்னே கழிந்த பலர் பாழாய்ப் போயினர்; நீங்களும் அங்ஙனே நசித்துப் போகாமே வடமதுரைப்பிறந்த பெருமானுடைய திருக்குணங்களைச் சொல்லி உய்யப்பாருங்கள்; இது தவிர வேறு ஹிதமில்லை ஆத்மாவுக்கு என்கிறாரிப்பாட்டில். பாட்டுத் தொடங்கும்போதே இல்லை கண்டீரின்பமந்தோ! என்கிறார். கெடுவிநான் ! துக்கமயமான ஸம்ஸாரநிலத்தில் ஸீநாபாஸமுள்ளதேயல்லது உண்மையான ஸீதம் லவலேசமுமில்லை திடீர் என்கிறார். இதை நீங்கள் அறியாதவர்களல்லீரே; அறிந்தவுங்களுக்கு நான் எடுத்துக்காட்ட வேணுமோ; என்பது அந்தோ வென்பதன் கருத்து "ப்த்யக்ஷமும் அகிஞ்சித்தரமாயிருக்க உபதேசிக்கிறாரிறே" என்பர் நம்பிள்ளை. இதனால் ஆழ்வாருடைய அருளின் கனம் தெரிவிக்கப்பட்டதாம். உள்ளது நினையாதே யென்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் பணிப்பர்; 'ஸம்ஸாரத்தில் இன்பமில்லை' என்கிற வுண்மையை நினையாமல் என்பது ஒரு பொருள். 'ஸுகரூப முமாய் நித்யமுமாயிருப்பது பகவத்விஷயம்' என்கிறவுண்மையை நினையாமல் என்பது மற்றொரு பொருள். தொல்லையார்களெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் = தோன்றினவிடந்தன்னிலே நின்று தீய்ந்துபோம் சிலபூண்டுகளுண்டே; அப்படி உத்பத்தியும் விநாசமுமேயாய்க் கழிந்து போனவர்கள்–உள்ளது நினையாதே தொலைந்து போனவர்கள் எண்ணிக்கையில் அகப்படுவர்களோ? ஸம்ஸாரமோ அநாதி; விவேகமோ துர்லபம்; அவிவேசிகளாயே மாண்டு போனவர்கள் அஸங்க்யேயர் என்க. 'நாங்கள் அப்படி அவிவேகிகளாய்த் தொலைந்து போககில்லோம்; எங்களுக்கு உய்யும் விரகு சொல்லலாகாதோ?' என்று சிலர் கேட்க, பின்னடிகளால் ஹிதமூரைக்கிறார். மல்லை மூதூர் வடமதுரை= செல்வச்சிறப்புடைனை பற்றி மல்லை யென்கிறது. பகவத் ஸம்பந்தம் அநாதியாயுள்ளது பற்றி மூதூர் என்கிறது. "ஸித்தாச்ரமமாய் ஸ்ரீவாமனனெழுந்தருளியிருந்தும், ஸ்ரீசத்ருக்நாழ்வான் படை வீடுசெய்தும் கிருஷ்ணன் வந்தவதரித்தும் இப்படி பகவத்ஸம்பந்தம் மாறாதே போருகிற தேசமாயிற்று" என்பது ஈடு. திருப்பாவையில் "மன்னு வடமதுரைமைந்தனை" என்றவிடத்து வியாக்கியானமுங்காண்க.

English Translation

There is no joy, that is certain, Alas, not realising this, how many men have come and passed away in vain since yore! In short, praise the Lord who took birth in the ancient Mathura city, other than this there is nothing

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்