விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துணையும் சார்வும்ஆகுவார்போல்*  சுற்றத்தவர்பிறரும்* 
    அணையவந்த ஆக்கம்உண்டேல்*  அட்டைகள்போல் சுவைப்பர்*
    கணைஒன்றாலே ஏழ்மரமும் எய்த*  எம்கார்முகிலைப்* 
    புணைஎன்றுஉய்யப் போகல்அல்லால்*  இல்லைகண்டீர்பொருளே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானம் செய்யப்பெற்ற பின்பும் மனத்தெளியாமல் வாலியின் பேராற்றலைப்பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும் துந்துபியின் உடலெலும்பை ஒருயோஜனை தூரம் துக்கியெறிந்ததையுங் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றலமைந்தவை வெல்வது கூடுமோ? என்று சொல்ல, அது கேட்ட லக்ஷமணன் உனக்கு நம்பிக்கையில்லையாயின் இப்போது என்ன செய்யவேண்டுவது? என்ன ஸுக்ரீவன், 'இராமபிரான் நீறுபூத்த நெருப்புப்போலத் தோன்றிலும் வாலியின் வல்லமையை நினைக்கும் போது சங்கையுண்டாகின்றது; ஏழு மராமங்களைத் துளைத்து இந்த துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கடைதூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்புதலுண்டாகுமாறு என்று சொல்ல; ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாகுநாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபியின் உடலெலும்புக் குவியலைத் தனது காற் கட்டைவிரலினால் இரேசாய்த் தூக்கிப் பந்துயோஜனை துரத்துக்கு அப்பால் எறிய, அதனைக் கண்ட சுக்ரீவன் முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைத் தூக்கி யெறிந்தான்; இப்போது உலர்ந்து போன விதனைத் துக்கியெறிதல் ஒரு சிறப்பன்று என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மரங்களின் மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டும் அம்பறாத் தூணியையடைந்ததென்பது, கணையொன்றாலே யேழ்மரமுமெய்த வரலாறு, 'நம்மை ரஷிப்பனோ மாட்டானோ' என்று அடியாருக்குச் சங்கைபிறந்தால், அந்த சங்கையைப் போக்கி அரியன செய்தும் அடியாரைக் காத்தருள்பவன் என்ற மஹாகுணம் இந்தச் சரிதையினால் விளங்கும். இப்படி அரியன செய்து நம்பிக்கையையுண்டாக்கி அடியாரைக் காத்தருளவல்ல பெருமாள் நிற்க, இவனையே துணையாகவும் சார்வாகவும் பற்ற வேண்டியிருக்க அணையவந்தவாக்சமுண்டேல் அட்டைகள்போல் சுவைக்கின்ற பொய்யுறவினரைப் பற்றி அணையவந்தாக்சமுண்டேல் அட்டைகள் போல் சுவைக்கின்ற பொய்யுறவினரைப் பற்றி யொழிவதே! என்ற நிர்வதேம் வெளிப்படுமாறு அருளிச் செய்தாராயிற்று. எம்பெருமானுடைய மஹத்தான இளநார்யத்தையும், கைம்மாறு கருதாது அருளபுரியந் தன்மையையுங் கணிசித்து எங்கார் முகிலை என்றார். 'புணையென்று' என்றதனால் "என் காரியம் உனக்கே கடமை" என்று ஒரு வாய்ச் சொல் சொன்னமாத்திரத்தில் உஜ்ஜீவிக்க பிராப்தமாகும் என்பது தொளிக்கும் மனமொழி மெய்களாகிற முக்கரணங்களில் மொழியாகிற ஒருகரணமே அமையுமென்றதாயிற்று

English Translation

Friends and relatives gives you their time, but sup your wealth like leeches till it lasts. Seek the prince who shot an arrow through seven trees, he is an oasis of freedom. Other than him there is no way, this is certain

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்