விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாளும் வாய்க்க நங்கட்கு*  நளிர்நீர்க் கடலைப் படைத்து*  தன் 
    தாளும் தோளும் முடிகளும்*  சமன் இலாத பலபரப்பி*
    நீளும் படர்பூங் கற்பகக்காவும்*  நிறைபல்நாயிற்றின்* 
    கோளும்உடைய மணிமலைபோல்*  கிடந்தான் தமர்கள் கூட்டமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பரப்பி - பரப்பிக்கொண்டு
நீளும் படர் பூ - நீண்டு படர்ந்த புஷ்பங்களையும்
கற்பகம் காவும் - கற்பகச் சோலையையும்
நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய - நிறைந்த பல ஆதித்ய தேஜஸ்ஸையு முடைத்தான
மணி மலை போல் - மாணிக்கமலை போலே

விளக்க உரை

பாகவதர்களின் திரள்களைக் கண்டு கொண்டிருந்தாலே போதுமே யென்கிறாரிப்பாட்டில். “தமர்கள் கூட்டமே நாளும் வாய்க்க நங்கட்கு“ என்று அந்வயிப்பது. பாகவதர் என்னுஞ் சொல்லுக்கு “பகவானைச் சேர்ந்தவர்கள“ என் பொருளாதலால், எப்படிப்பட்ட பகவானைச் சேர்ந்தவர்கள் என்று கேள்வியுண்டாகுமே, அதற்குவிடை கூறு கிறது நளிர் நீர்க்கடலைப் படைத்து என்று தொடங்கி. * அப ஏவ ஸ்ஸர்ஜாதௌ* என்கிற படியே ஏகார்ணவத்தை முதலிலே ஸ்ருஷ்டித்த அதிலே *ஸஹஸ்ரசீர்ஷா புருஷஸ் ஸஹஸ் ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்* என்று ஆயிரக்கணக்காகச் சொல்லப்பட்ட தன்னுடைய திருவடிகளையும் திருத்தோள்களையும் நிஸ்ஸங்கொசமாகப் பரப்பிக்கொண்டு, ஒரு மாணிக்கமலை சாய்ந்தாற்போலே திருக்கண் வளர்ந்தருளின பெருமானிடத்து ஈடுபட்டவர்களான பாகவதர்களின் திரள் நங்கட்கு நாளும்வாய்க்க, இரண்டாமடியில் குறிக்கப்பட்ட உபமேய வஸ்துக்களுக்குப் பொருத்தமான உபமாந வஸ்துக்கள் மூன்றாமடியில் குறிக்கப்பட்டன. நீளும் படர்பூப்போன்ற தாளும், கற்பகக்காவுபோன்ற தோளும், நிறைபன்னாயிற்றின் கோள் போன்ற முடிகளும் என்றதாகக் கொள்க. பூக்களையும் கற்பகச்சோலையையும் பல ஸூர்யதேஜஸ்ஸையும் கொண்ட ஒரு மாணிக்கமலை எம்பெருமானுக்கு உவமையாக்க் கொள்ளப்பட்டதிங்கு. அப்படிப்பட்ட எம்பெருமானுடைய தமர்கள் என்றது –இவ்வழக்கைச் சொல்லி வா வெருவுகின்ற பக்தர்கள் என்றபடி.

English Translation

He made the cool ocean, and spread his peerless from on it. His countless heads, hands and feet are like a kalpa forest growing wild over a gem-mountain with the radiance of a thousand suns, I only long for the sweet company of his band of devotees

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்