விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உறுமோ பாவியேனுக்கு*  இவ்உலகம் மூன்றும் உடன்நிறைய* 
    சிறுமாமேனி நிமிர்த்த*  என்செந்தாமரைக்கண் திருக்குறளன்*
    நறுமாவிரைநாள் மலர்அடிக்கீழ்ப்*   புகுதல் அன்றி அவன்அடியார்* 
    சிறுமா மனிசராய் என்னைஆண்டார்*  இங்கே திரியவே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிறு மா மனிசர் ஆய் - வடிவில் சிறுத்து அறிவில் பெருத்தவர்களாயிருந்து கொண்டு
என்னை ஆண்டார் - என்னை யீடுபடுத்திக் கொண்டவர்களான
அவன் அடியார் - பாகவதர்கள்
இங்கே திரிய - இந்நிலவுலகில் இருக்க
அன்றி - அன்னவர்களுக்கு அடிமை பூண்டிருப்பது 

விளக்க உரை

இம்மூவுலகங்களும் ஏக்காலத்திலே நிறையும்படியாகச் சிறிய திருமேனியைப் பெரிய திருமேனியாக்கி வளர்ந்து உலகமுழுதும் வியாபித்த செந்தாமரைக்கண்ணனுடைய திருவடிகளின்கீழேயிருந்து கைங்கரியம் செய்வதானது பாவியேனுக்கு உறுமோ? உற்றதாகுமோ? உற்றதாகாது என்றவாறு. ஏனென்னில், அவனடியார் சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, அன்றி –அதைத்தவிர்த்து, நறுமாவியை நாண்மலரடிக்கிழ்ப்புகுதல் உறுமோ? பகவானளவிலே செல்லுகை எனக்கு உறுமோ? சீறுமாமனிசர் என்றவிடத்து பட்டருடைய இதிஹாஸம் கேண்மின், பட்டர் சிறு பிராயத்திலே ஒருநாள், ஆழ்வான் திருவாய்மொழி அநுஸந்திக்கும்போது இப்பாட்டில் சிறுமாமனிசராய் என்றதைக்கேட்டு, “சிறுமாமனிசரென்றால் சிறியராயும் பெரியராயுமுள்ள மனிசர் என்று பொருளல்லவா? ஒன்றுக்கொன்று எதிர்த்தட்டான சிறுமை பெருமை என்கிற குணங்களிரண்டும் ஒரு பொருளிடத்து ஒன்று சேர்ந்திருக்குமோ? ஆழ்வார் சிறுமாமனிசரென்று இரண்டையும் ஒருவரிடத்தே சேர அருளிச்செய்த்து பொருந்துவது எங்ஙனே? என்று திருத்தந்தையாரை வினாவினர், அதற்கு ஆழ்வான் ஆலோசித்து “பிள்ளாய்! நன்கு வினாவினாய், உனக்கு உபநயனமாகாமையால் இப்போது வேதசாஸ்திரங்களைக்கொண்டு விடைசொல்ல்லாகாது, ஆகிலும் ப்ரத்யக்ஷத்திற் காட்டுகிறோங்காண்“ என்று சொல்லச் சில பெரியோர்களைக்காட்டி, திருமேனி சிறுத்து ஞானம் பெருத்திருக்கிற சிறியாச்சான் அருளாளப் பெருமாளெம்பெருமானார் போல்வாரைச் சிறுமாமனிசரென்னத் தட்டில்லையே, முதலியாண்டான் எம்பார் முதலிய பெரியோர்கள் உலகத்தாரோடொக்க அன்னபானாதிகள் கொள்வதோடு எம்பெருமான் பக்கலீடுபடுவதிற் பரமபதத்து நிர்யஸூரிகளைப் போலுதலால் இப்படிப்பட்டவர்கள் சிறுமாமனிசரென்னத் தக்கவரன்றோ? இங்ஙனமே வடிவு சிறுத்து மஹிமை பெருத்தவர்களும், மனிதரென்று பார்க்கும்போது சிறுமை தோன்றிலும், பகவத் பக்தி ஞானம் அனுட்டானம் முதலிய நற்குணங்களை நோக்குமளவில் நித்ய முக்தர்களினும் மேன்மைபெற்று விளங்குகிறவர்களுமான மஹாபுருஷர்களையே ஆழ்வார் சிறுமாமனிசரென்று குறித்தருளினர்“ என்றருளிச்செய்ய, பட்டர் அதுகேட்டு, தகும் தகும் என்று இசைவுகொண்டனர்.

English Translation

Is it proper for me to join the lotus feet of the beautiful manikin with lotus eyes, -who extended his small frame and took the worlds, -when his devotees, great humble men, my masters, roam the Earth?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்