விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்*  நாயகன் தன்அடிமை* 
    நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன் சொல்*
    நேர்பட்ட தமிழ்மாலை*  ஆயிரத்துள் இவை பத்தும் 
    நேர்பட்டார்*  அவர் நேர்பட்டார்*  நெடுமாற்கு அடிமை செய்யவே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சொல் நேர்பட்ட - சொல்வாய்ப்பையுடைய
தமிழ் மாலை - தமிழ் மாலையான
ஆயிரத்துள் - ஆயிரத்திலுள்ளே
இவை பத்தும் நேர்பட்டார் அவர் - இப்பதிகத்தைப் பயிலப்பெற்றவர்கள்
நெடுமாற்கு அடிமை செய்ய நேர்பட்டார் - ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்ய வாய்த்தவராவர்.

விளக்க உரை

இப்பதிகம் கற்றவர்கள் இவ்வாத்மாவுக்குச் சிறந்த புருஷார்த்தமான பகவத்கைங்கரியத்தைப் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். முன்னி ரண்டடிகளில் ஆழ்வாரதம் பெருமை சொல்லுகிறது. அடுத்தபதிகம் * நெடுமாற்கடிமை, அதில் பாகவத கைங்கர்யமே பரமபுருஷார்த்தமென்பது அறுதியிடப்படுவதால் அப்பெருவெள்ளம் இப்பாட்டிலேயே பொசிந்து காட்டுகிறது தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் என்று. ஆக, எம்பெருமானுடைய வடிவழகு முதலான திருக்குணங்களை யனுபவித்து அதனாலுண்டான மகிழ்ச்சியினாலே பகவச்சேஷத்வ காஷ்டையில் நின்ற ஆழ்வார், சொல்வாய்ப்பை யுடைத்தாம்படி யருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்தையும் ஓதவல்லவர்கள் தொண்டர்பால் வியாமோஹமே வடிவெடுத்தவனான எம்பெருமானுக்கு அடிமைசெய்ய வாய்த்தவர்களாவர் என்று பயனுரைத்தாராயிற்று.

English Translation

This decad of the beautiful thousand songs by Satakopan, devotee of the devotees of the Lord who is master of the three worlds, will secure a life of service to the Lord for those who recite it

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்