விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பரவாள் இவள் நின்று இராப்பகல்*  பனிநீர்நிறக் கண்ணபிரான்* 
    விரவார்இசை மறை வேதியர்ஒலி*  வேலையின்  நின்றுஒலிப்ப*
    கரவார் தடம்தொறும் தாமரைக்கயம்*  தீவிகை நின்றுஅலரும்* 
    புரவார் கழனிகள் சூழ்*  திருப்புலியூர்ப்  புகழ்அன்றிமற்றே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாமரை கயம் - தாமரைத் திரள்கள்
தீவிகை நின்று அலரும் - நிலைவிளக்குப்போலே அலராநிற்குமிடமாய்
புரவு ஆர் கழனிகள் சூழ் - ஸாரம் மிக்க கழனிகளாலே சூழப்பட்டதான
திருப்புலியூர் - திருப்புலியூரினுடைய
புகழ் அன்றி - புகழொழிய

விளக்க உரை

பாட்டினடியிலுள்ள பரவாளிவள் என்பதற்கு, பாட்டின் முடிவிலுள்ள திருப்புலியூர்ப்புகழன்றிமற்றே என்பதோடு அந்வயங்காண்க. திருப்புலியூரின் புகழை வாய்விட்டுச் சொல்லுவதுதவிர வேறொன்றுமறியாளித்தலைவி –என்கிறாள் தோழி. திருப்புலியூரின் புகழைப் பேசுவதாவது, அத்தலத்திலுறையும் பெருமானது வடிவழகைப் பேசுவதும், அங்குள்ள பாகவதர்களின் வேதகோஷம் முதலியவற்றைப் பேசுகையும், ஊரின் நீர்வள நிலவளங்களைப் பேசுவது மேயாதலால் இவை மூன்றையும் பேசுகின்றாளென்பது முறையே மூன்றடிகளாலும் தெரிவிக்கப்பட்டது. பனிநீர்க் கண்ணபிரானென்பதனால் திருப்புலியூர்ப்பெருமானுடைய வடிவழகும் சில குணமும் சொல்லிற்று. வைதிகர்களின் வேதகோஷம் கடல்போல் முழங்கும் பெருமை இரண்டாமடியிற் சொல்லிற்று. முதலைகள் மிக்க பொய்கைகள் தோறும் தாமரைகள் நிலைவிளக்கெரியுமாபோலே மலராநிற்குமழகு மூன்றாமடியிலே சொல்லிற்று. ஆக இவையே இவளுக்கு வாய்வெருவுதலாயிருத்தலால் அத்தலத்தெம்பெருமானோட்டைக் கலவி இவளுக்கு நேர்ந்திருக்கவேணுமென்றாளாயிற்று.

English Translation

Night and day she speaks only of the cloud-hued Lord who resides in Tiruppuliyur surrounded by fertile fields, where alligator ponds are aflame with red lotus blooms, and sounds of beautiful music rise with Vedic Chants incessantly

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்