விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மெல்இலைச் செல்வவண் கொடிப்புல்க*   வீங்குஇளம்தாள்கமுகின்* 
    மல்இலை மடல்வாழை*  ஈன்கனி சூழ்ந்து  மணம்கமழ்ந்து*
    புல்இலைத் தெங்கினூடு*  கால் உலவும்தண் திருப்புலியூர்* 
    மல்லல்அம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்*   இம் மடவரலே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மல் லை மடல் வாழை - செறிந்த இலைகளையும் மடல்களையுமுடைய வாழைகளினுடைய
ஈன் கனி சூழ்ந்து - பழக்குலைகள் சூழ்ந்திருக்கப்பெற்றதனால்
மணம் கமழ்ந்து - பரிமளம் விஞ்சி
புல் இலை தெங்கி னூடு - செறிந்த ஓலைகளையுடைய தென்னை மரங்களின் நடுவே
கால் உலவும் - தென்றற்காற்று உலாவும்படியான

விளக்க உரை

திருப்புலியூரிலுள்ள அஃறிணைப் பொருள்களுங்கூட ஒன்றோடொன்று கலந்து பரிமாறி வாழாநிற்கு மியல்வைக்கண்டு இத்தலைவியும் அத்திருப்பதி யெம்பெருமானோடே கலந்துவாழப்பெற்றாளென்கிறாள் தோழி. கமுகமரத்திலே வெற்றிலைக் கொடி படர்ந்திருக்கையாகிற சேர்த்தி முதலடியிலே கூறப்பட்டது. ஸ்ரீ குணரத்நகோசத்தில் (3) * அநுகல த்துகாண்டாலிங்கநேத்யாதிச்லோகத்தில் ஸ்ரீரங்கநாதனைக் கற்பகத்தருவாகவும், ஸ்ரீரங்கநாச்சியாரைக் கற்பக்க் கொடியாகவும் உருவகப்படுத்திக் கூறியிருப்பது இங்கே நினைக்கத்தக்கது. இதற்குமேல், தென்றலானது வாழைத்தோப்பிலே புகுந்து புறப்பட்டுத் தென்னத்தோப்பிலே வீசாநின்றதென்று சொல்லுகிறவிதனால் இதுவுமொரு விலக்ஷணஸம்ச்லேஷமென்று காட்டினபடி. ஆக இப்படிப்பட்ட வாய்ப்பு அமைந்த தலத்தில் இவளும் தானுகந்த விஷயத்தை அணையப்பெற்றது வியப்பன்றே, ப்ராப்தமேயென்றாளாயிற்று.

English Translation

Betel creepers with tender leaves embrace the Areca trunks there. The cool breeze blows over ripe plantain fruit and wafts the fragrance over caressing coconut leaves in Tiruppuliyur. This young one has attained the feet of the affluent Krishna there

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்