விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருஅருள் மூழ்கி வைகலும்*  செழுநீர்நிறக் கண்ணபிரான்* 
    திருஅருள்களும் சேர்ந்தமைக்கு*  அடையாளம் திருந்தஉள*
    திருஅருள் அருளால் அவன்*  சென்று   சேர்தண் திருப்புலியூர்* 
    திருஅருள் கமுகுஒண் பழத்தது*  மெல்லியல் செவ்விதழே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடையாளம் திருந்த உள - அடையாளங்கள் மறைக்க வொண்ணாதபடியுள்ளன.
(அவற்றுள் முக்கியமான அடையான மொன்று கேளீர்)
திரு அருள் அருளால் - தன்னுடைய திருவருளை அருளுகைக்காக
அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் - அப்பெருமான் வந்துறையுமிடமான குளிர்ந்த திருப்புலியூரில்
திரு அருள் கழுகு ஒண் பழத்தது - அவனதருளால் வளரும் கமுகினுடைய அழகிய பழம் போன்றுள்ளது.
மெல் இயல் செம் இதழ் - இத்தலைவியின் சிவந்த அதரம்.

விளக்க உரை

இப்பெண்பிள்ளையின் அதரம் இதற்கு முன்பிருந்தபடியும் இப்போதிருக்கிறபடியும் காணமாட்டீர்களோ? அதரத்தில் பழுப்புக்கு அடியறியீர்களோ? திருப்புலியூர்ச்சோலைகளில் வளரும் கமுகம்பழத்தின் பழுப்புப்போலே யிராநின்றபடி பாரீர், அவ்வூர்ப்பெருமான் தன்னுடைய ஸௌந்தர்ய ஸௌலப்யாதிகளைக் காட்டி இவளையீடுபடுத்திக் கொண்டானென்பதற்கும் இவளுக்கு அவனோடு கலவி ப்ராப்தமாயிற்றென்பதற்கும் அடையாளம் ஒன்றிரண்டல்லவே, நீங்களே நன்கு ஆராய்ந்து பார்க்கலாமே யென்கிறாள் தோழி. வைநலும் திருவருள் மூழ்கி –அப்பெருமானுடைய திருவருட்கடலிலே இவள் அவகாஹிக்கப்பெற்றது இன்று நேற்று என்னலாயிருந்த்தோ? நெடுநாளாகவேயன்றோ இவளுக்கு இத்தொடர்பு நேர்ந்துவருவது அவனுமிவளைத் தன்னுடைய ஸௌந்தர்ய ஸௌலப்யங்களைக் காட்டியன்றோ அகப்படுத்திக் கொண்டது. அவனுடைய விஷயீகாரம் இவள் பக்கலிலே ஒரு மடைசெய்திருக்கைக்கு அடையாளம் செவ்வனேயுள இது நீ எப்படியறிந்தாயென்று கேட்கிறாயோ? சொல்லுகிறேன் கேளாய் (மெல்லியல்செவ்விதழ் கமுகொண்பழத்தது) மெல்லியிலாளான இப்பெண்பிள்ளையினுடைய அதரம் அழகிய கமுகம் பழம்போலேயிராநின்றது, இதுகொண்டு ஐயமற அறியலாயிராநின்றதில்லையோ வென்றாளாயிற்று.

English Translation

There is clear proof that the slender one has received the favours and grace of the Lord. Her lips have acquired the red hue of Areca fruit, that grows in Tiruppulliyur graced by the Lord

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்