விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊர்வளம்கிளர் சோலையும்*  கரும்பும்   பெரும்செந்நெலும் சூழ்ந்து* 
    ஏர்வளம்கிளர் தண்பணைக்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்*
    சீர்வளம்கிளர் மூவுலகுஉண்டுஉமிழ்*  தேவபிரான்* 
    பேர்வளம்கிளர்ந்தன்றிப் பேச்சுஇலள்*  இன்று இப்புனைஇழையே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீர் வளம் கிளர் - திருக்குணங்களின் சிறப்பு விளங்கப் பெற்ற
மூ உலகு உண்டு - த்ரிலோக ரக்ஷகனான எம்பெருமானுடைய
பேர் வளம் - திருநாமங்களின் சிறப்பை
இன்று - ஆபரணமணிந்த இந்நாளில்
இப் புனையிழை - இத்தலைமகள்

விளக்க உரை

திருப்புலியூரின் வளங்களைச் சொல்லத்தொடங்கி “வண்டினமுரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை கொண்டல்மீதணவுஞ்சோலை குயிலினங் கூவுஞ்சோலை அண்டர்கோனமருஞ்சோலை“ என்றாப்போலே சோலைகளின் வளத்தைச் சொல்லுவது, வயலடங்கலும் செல்லுமழகைச் சொல்லுவது, சுற்றிலும் நீர்நிலைகள் சூழ்ந்திருக்குமழகைச் சொல்லுவதாய் இப்பெண்பிள்ளை பேசுமழகுகளை என் சொல்வேன்? இவ்வளவேயோ? அத்தலத்துப் பெருமானுடைய ஆபத்ஸகத்வமென்னுந் திருக்குணத்தலே யீடுபட்டு அவன் ஸகல்லோகங்களையும் தீருவயிற்றிலேவைத்து வெளிநாடு காணவுமிழ்ந்த செயலையும் சொல்லாநின்றாள், இவையொழிய வேறொரு பேச்சுமறியாள். இவை சொல்லும்போது இவளுடைய வடிவு ஆபரணம் பூண்டாற்போலே விளங்குமழகும். அப்ரமேயம், இவற்றாலம் இவளுக்குக் திருப்புலியூர்ப் பெருமானோடு கலவி நேர்ந்திருக்கவேணும்போல் தோன்றுகிறது என்கிறாளாயிற்று தோழி.

English Translation

Yoked bullocks plough the fertile fields in Kuttanadu, where groves and plantations grow tall to speak the wealth, -of the Lord who swallowed and remade the world, the Lord of celestials. This bright dame speaks to none, except about his glories

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்