விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புகழும் இவள்நின்று இராப்பகல்*  பொருநீர்க்கடல் தீப்பட்டு*  எங்கும் 
    திகழும்எரியொடு செல்வதுஒப்ப*  செழும்கதிர்ஆழிமுதல்*
    புகழும் பொருபடை ஏந்தி*  போர்புக்கு  அசுரரைப் பொன்றுவித்தான்* 
    திகழும் மணிநெடு மாடம்நீடு*   திருப்புலியூர் வளமே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொரு நீர் கடல் தீப்பட்டு - அலையெறிகின்ற கடலானது நெருப்புக் கொளுத்தி
எஙகும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப - எங்கும் விளங்குகின்ற ஜ்வாலைகளோடேகூடி நடந்து வருவதுபோலே
செழு கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்தி - மிக்க வொளியையுடைய திருவாழி முதலன புகழ்மிக்க திவ்யாயுதங்களை தரித்து
போர் புக்கு - போர்க்களத்திலே புகுந்து
அசுரரை பொன்று வித்தான் - அஸுரர்களை யழியச் செய்த பெருமானுடைய
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளம் - விளங்குகின்ற ரத்னமயமான உயர்ந்த மாடங்களை வரிசையாக வுடையதிருப்புலியூரியழகை

விளக்க உரை

ப்ண் கரதூஷண வதத்தில் பிராட்டி பெருமாளுடைய சௌர்யவீர்யபராக்ரமங்களில் தோற்று * தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம், பபூவஹ்ரு ஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே* என்று அனைத்துக் கொண்டாளென்று கேட்டிருந்தோம், அப்படியே இப்பெண்பிள்ளையும் திருப்புலியூர்த்தலைவன் திருவாழி திருச்சங்கு முதலான திவ்யாயுதங்களை யணிந்துகொண்டு போர்க்களத்திலே சென்று அரக்கரசுரர்களைத் தொலைத்தருளும் பேராற்றலை இரவும் பகலுமிடைவீடின்றிப் புகழ்ந்து கூறாநின்றாள், இதனாலும் இவளுக்கு அத்திருப்பதியெம்பெருமானோடே ஸம்பந்தம் நிகழ்ந்ததாகத் தோன்றுகின்றதென்கிறாள் தோழி. “புகழுமிவள்நின்றிராப்பகல்“ என்பதற்கு, பாட்டின் முடிவிலுள்ள திருப்புலியூர் வளமே யென்பதனோடு அந்வயம். கடல்வண்ணானான பெருமான் “ஜ்வாலாஜாஜ்வல்யமாநா“ என்னும்படியான ஜ்வாலைபொருந்திய திருவாழியாழ்வான் முதலான திவ்யாயுதங்களையணிந்து எழுந்தருள்வதானது “ஒருகடல் நெருப்புக்கொளுத்தி நடந்து செல்லா நின்றதோ! என்று உல்லேகிக்கும்படியாகவுள்ளதென்கிறாளாம் தலைவி, அதனை அநுவாதம் செய்கிறாள் தோழி.

English Translation

Night and day she stands and signs in praise of the bright mansioned Tiruppuliyur's grandeur. Like the ocean catching fire, lashing balls of hooping fire, -his flery weapons are impatient to destroy the Asuras

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்