விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தெருளும் மருளும் மாய்த்து*  தன்திருந்து செம்பொன் கழல்அடிக்கீழ்* 
    அருளிஇருத்தும் அம்மானாம்*  அயனாம் சிவனாம்*  திருமாலால்
    அருளப்பட்ட சடகோபன்*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தால்* 
    அருளி அடிக்கீழ் இருத்தும்*  நம்அண்ணல் கருமாணிக்கமே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அருளப்பட்ட - மயர்வற மதிநலமருளப்பெற்ற
சடகோபன் - நம்மாழ்வாருடைய
ஓர் ஆயிரத்துள் இ பத்தால் - ஆயிரத்துள் இப்பதிகம் நிமித்தமாக
நம் அண்ணல் கருமாணிக்கம் - கரியமாணிக்கம் போன்ற நம் ஸ்வாமி
(இத்திருவாய்மொழியை ஓதுமவர்களை)
அருளி அடி கீழ் இருந்தும் - கிருபை பண்ணித் தன் திருவடிகளின்கீழே இருத்துவன்

விளக்க உரை

உரை:1

இத்திருவாய்மொழி பகவத் ப்ராப்தியைப் பண்ணி தருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். தெருளும் மருளும் மாய்த்து –தெருளாவது ஞானம். மருளாவது அஜ்ஞானம், மருளைமாய்க்கலாமேயல்லது தெருளையும் மாய்க்கலாமாவென்று சங்கை தோன்றும். மருள் கலசாத தெருள் உத்தேச்யமேயொழிய மருளோடு கலசிவருகிற தெருள் உத்தேச்யமன்றே, அப்படிப்பட்ட தெருளையே மாய்த்ததாக இங்குச் சொல்லுகிறது. “ஸ்வாநுபவவிரோதியான ப்ராக்ருத விஷயஜ்ஞாநாஜ்ஞாநங்களை வாஸநையோடே போக்கி“ என்பது ஈடு. தன்திருந்து செம்பொற் கழலடிக்கீழருளியிருத்தும் –அடியார்களை வேறொருவர் காலில் குனியவிடாமல், ஸ்ப்ருஹணீயமாய் வீரக்கழலையுடைத்தான தன் திருவடிகளின்கீழே நிர்ஹேதுக கிருபையினால் ஸ்தாபிக்குமியல்வின் எம்பெருமானென்க. அயனாம் சிவனாம் திருமால் -* மூவர்காரியமுந்திருந்தும் முதல்வன் * என்று பெரியாழ்வார்ருளிச் செய்தபடி ஸ்ருஷ்டி ஸம்ஹாரத்தொழில்களை நிர்வஹிக்கைக்காப் பிரமனையும் சிவனையும் அநுப்ரவேசித்திருக்கும் திருமால் என்றபடி. எம்பெருமானாலே மயர்வறமதிநலமருளப்பெற்ற ஆழ்வார்ருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்தும் வல்லாரை அப்பெருமான் அருளித் தன் திருவடிகளின் கீழ்ப் பணிசெய்யக் கொண்டருள்வனென்று.

உரை:2

மயககமும் தெளிவும் மாறி மாறி வரும் நிலையை மாற்றி தனது செம்பொற்கழலடிகளின் கீழ் அருள் செய்து இருத்தும் தலைவனாம் நான்முகனாம் சிவனாம் திருமாலாம் எம்பெருமானால் அருளப்பட்ட சடகோபனாகிய நான் எழுதிய இந்த ஓர் ஆயிரம் பாடல்களில் இப்பத்துப் பாடல்களைப் பாடுவதால் நம் அண்ணல் கருமாணிக்கம் பாடியவரை எல்லாம் தன் திருவடிகளின் கீழ் அருள் செய்து இருத்துவான்.இன்னொரு இடத்தில் தனக்கு அருளிய இறைவன் தன்னை விட்டு நீங்கக் கூடாது என்று கூவும் போது இவ்வாறு உருகுகிறார்.

English Translation

This decad of the thousand songs by Satokapan, blessed by the Lord who destroys knowledge and nescience, the Lord who is Brahma, Siva and Indra, secures the lotus feet of the black-gem Lord

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்