விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உளரும்இல்லை அல்லராய்*  உளராய்இல்லை ஆகியே* 
    உளர்எம்ஒருவர் அவர்வந்து*  என்உள்ளத்துள்ளே உறைகின்றார்*
    வளரும் பிறையும் தேய்பிறையும்போல*  அசைவும் ஆக்கமும்* 
    வளரும் சுடரும் இருளும்போல்*  தெருளும் மருளும் மாய்த்தோமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம் ஒருவர் உளர் - எம்பெருமானுளர்
அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார்வ ளரும் பிறைப் போலே ஆக்கமும் -வளர் பிறைக்கு உள்ளது போலே வளர்ச்சியும்
தேய் பிளை போல அசைவும் - க்ருஷ்ணபக்ஷ சந்திரனுக்கு உள்ளதுபோலே தேய்வும் உடைத்தாகி
வளரும் கடரும் இருளும் போல் - ஸூரியனும் இருளும் போலே மாறி மாறி வரக்கூடியதான
தெருளும் மருளும் மாய்த்தோம் - கழித்துக்கொள்ளப்பெற்றோம்.

விளக்க உரை

இப்படிப்பட்ட ஆத்மஸ்வரூபத்தை எனக்குக் காட்டிக் கொடுத்து, பாஹ்ய குத்ருஷ்டிமதங்களில் நான் கைகழியப் போகாதபடி என்னெஞசிலே எம்பெருமான் புகுந்திருக்கையாலே என்னுடைய ஸாம்ஸாரிக க்லேசமெல்லாம் தீரப்பெற்றேனென்று களித்துப் பேசும் பாசுரமிது. முதலடிக்கு இரண்டு வகையாகப் பொருள் நிர்வஹிப்பர்கள், உளருமில்லையல்லராய் என்று ஸேச்வரஸாங்க்யமதாநுவாதம், இல்லையாகியே உளராய் என்று நிரீச்வரஸாங்க்யமதாநு வாதம். “ஈச்வரனென்பானொருவனுளன், இல்லையென்னவொண்ணாதே அஸ்திமாத்ரமாயிருக்கும்“ என்பது ஸேச்வர ஸாங்க்யமதம். இனி, “இல்லையாகியே அவருடைய வுண்மை“ என்பது நிரீச்வரஸாங்க்யமதம். அந்த பக்ஷங்களை நிரஸிப்பதாக ஒரு நிர்வாஹம். மற்றொரு நிர்வாஹமாவது -* மெய்யர்க்கே மெய்யனாகும் –பொய்யர்க்கே பொய்யனாகும் * என்று திருமாலையிலருளிச் செய்தபடியே, மெய்யரான அடியார்கட்கு இல்லையல்லராய் உளராயிருப்பர், பொய்யான அநாச்ரிதர்க்கு இல்லையாகியேயுளராயிருப்பர் என்பதாக. (உளரெம்மொருவர்) திருக்குணங்கள் விபூதிகள் முதலியவற்றால் பூரபூர்ணராய்க் கொண்டு உளராய் அவற்றைக் காட்டி யென்னையடிமைகொண்ட அத்விதீயர் என்றபடி. அவர்வந்து என்னுள்ளத்துள்ளே யுறைநின்றார் –அப்படிப்பட்டவர்வந்து தாம் மயர்வறமதிநல மருளித்திருத்தின எனது நெஞ்சிலே நித்யவாஸம் பண்ணுநின்றார். ஆனபின்பு சந்திரனுக்குப் போலே மாறிமாறி வரக்கடவதான வளர்ச்சியும் அழிவும் இல்லாதபடியாகவும், சூரியனும் இருளும் மாறிமாறிவருகிறாப்போலே ஜ்ஞானமும் அஜ்ஞானமும் மாறிமாறி வாராதபடியாகவும் ஆத்மதர்சனத்தில் ஏக ரூபமான ஞானம் விளைப் பெற்றோமென்றாராயிற்று.

English Translation

My Lord who is 'not and 'is not' has revealed himself, My Lord has come to stay with me and destroyed forever growth and decay, like the moon waxing and waning, like knowledge and nescience, like sunlight and shade

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்