விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எய்த்தார் எய்த்தார் எய்த்தார்என்று*  இல்லத்தாரும் புறத்தாரும்- 
    மொய்த்து*  ஆங்கு அறிமுயங்க*  தாம் போகும் போது*  உன்மத்தர்போல்
    பித்தேஏறி அநுராகம்  பொழியும்போது*  எம் பெம்மானோடு- 
    ஒத்தேசென்று*  அங்குஉள்ளம்கூடக்*  கூடிற்றாகில் நல்உறைப்பே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாம் போகும்போது - உத்க்ரமணமாகிறவப்போது
உன்மத்தர் போல் பித்தே ஏறி - உன்மத்தர்கள் போல். நெஞ்சு கலங்கி
அனுராகம் பொழியும் போது - அனுராகம் மிகமிகப்பெருங்குங் காலத்தில்
எம்பெரும்மானோடு ஒத்தே சென்று - (கலக்கமற்றுத் தெளிவுபிறந்து) எம்பெருமானிடத்தில் பொருத்தமுண்டாகி
அங்கு உள்ளம் கூட கூடிற்றாகில் - அப்பெருமான் பக்கலிலே நெஞ்சு ப்ரவணமாகப் பெற்றால்

விளக்க உரை

பெறுதற்கரிதான இந்த ஞானம் ஒருவாறு கைவந்தாலும் எம்பெருமானைப் பற்றின அந்திமஸ்மிருதியில்லையாகில் இந்த ஞானம் கைபுகுருகைக்குப்பட்ட க்லேசமெல்லாம் பழுதேயாகுமென்கிறார். ஆறாயிரப்படியருளிச் செயல் –“இவ்வாத்மஸ்வரூப ஆவிர்ப்பாவ லக்ஷணமோக்ஷமானது இந்த்ரிய ஜயமாத்ரத்தாலே வைவாராது, அந்திமதசையிலே பகவத் ஸமாநாகார ஆத்மாநுஸந்தானமும் வேண்டுமென்கிறார்.“ என்று உயிர் உடலைவிட்டுக் கிளம்புகிறகாலம் ஒன்றுண்டே, அப்போது (முமூர்ஷுவாயிருக்கிற காலத்திலே) உயிர் உடலைவிட்டுப் புறப்படுதற்கு முன்னமே வீட்டிலுள்ளவர்களும் புறம்புள்ளவர்களும் “ஐயோ! முடிந்தான் முடிந்தான் முடிந்தான்!“ என்று பலகாலுஞ் சொல்லி மேலேவிழுந்து அரற்றுவர்களே, முமூர்ஷுவானவன் கலங்கின நிலைமையிலே நெஞ்சைத் தெளிவித்து த்வயாநுஸந்தானம் பண்ணவும் திருநாமங்களைச் சொல்லவும் பண்ணுகைக்கு முயலாதே நாலுநாள் பொறுத்துப் போகிற பிராணன் முன்னமே போம்படியாக அரற்றுவர்களே. கலியாணத்திற்கு அழைத்தாலும் வாராதவர்கள் துக்க முண்டாகுங்காலங்களில் தாங்களே வந்து மேல்விழுவர்களென்பது மொய்த்து என்ற சொலாற்றலால் தோன்றும். ஆங்கு அலறி முயங்க –இவனுக்குள்ள தெளிவும் போம்படி உடம்பைக் கட்டிக்கொண்டு பெருங்கூச்சலிடுவர்கள். இப்படிப்பட்ட நிலைமையிலே, தாம்போகும்போது – இவர்களையும் இவ்வைச்வர்யத்தையும் விட்டுப்போக மனமில்லாமலிருந்தும், ம்ருத்யு மீளவொண்ணாமையாலே சரீரத்தைவிட்டுத் தாங்களே போகாநிற்பர்கள், அப்படிப்பட்ட காலத்திலே. உன்மத்தர்போல் பித்தேயேறி –விரக்தர்களுங்கூட உந்மாத தசையிற்போலே அறிவு கெட்டுக் கலங்கி, அனுராகம் பொழியும்போது – இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரம போக்யங்கள், “இளையாளைப் பொன்னையும் பூட்டிக்கொடுவந்து முன்னே நிறுத்துவர்கள், புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹியாதநாளைக்கும் போர ஸ்நேஹிக்கத் தொடங்கும், ஜீவிகும் நான் லோபத்தாலே இவற்றுகு ஒன்றும் செய்யான், இப்போதாக “புதைத்து வைத்த தனத்தை ஆபரணமாகப் பூட்டிக் காணப்பெற்றிலோம்“ என்று மதகுதிறந்து ஸ்நேஹிக்கும்.“ அனுராகம் பொழியும் விதமிதுவே யென்க. இப்ப கலங்குகிற இவனைத் தனக்கு சேஷமென்று நினைத்திருப்பது போலே இவனும் தன்னை அவனுக்கு சேஷமென்று நினைத்து அல்லது அவனைத் தனக்கு சேஷியென்று நினைத்து அப்பெருமான் பக்கலிலே தன்னெஞ்சு சென்று கூடப் பெற்றதாகில் என்றும் பொருள் கூறுவர்.

English Translation

Kith and kin will hover around and wall, "He is going!", weep and fall and clutch your feet, as you depart, cutting through attachment and rising madness, if you can only go and join the Lord in your heart, that is well done!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்