விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அதுவே வீடு வீடு பேற்று*  இன்பம்தானும் அதுதேறி* 
    எதுவே தானும் பற்றுஇன்றி*  யாதும் இலிகள்ஆகிற்கில்*
    அதுவே வீடு வீடு பேற்று*  இன்பம்தானும் அதுதேறாது* 
    'எதுவே வீடு ஏது இன்பம்?' என்று*  எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேறி - இப்படியாக நிஷ்கர்ஷித்து
எதுவே தானும் பற்று இன்றி - ப்ரக்ருதிப்ராக்ருதங்களெல்லாவற்றிலும் ஸங்கமற்று
ஆதும் இலிகள் ஆகிற்கில் - ருசி வாஸனைகளுமில்லாதவர்களாக ஆகப்பெற்றால்
அதுவே வீடு - அதுதான் மோக்ஷம்
வீடு பேறு இன்பம் தானும் அது - மோக்ஷானந்தமும் அதுவே

விளக்க உரை

இங்குச் சொன்னபடியே ஆத்மஸாக்ஷாத்காரம் பண்ணப் பாராமல் வேறு சில வழிகளில் முயன்றால் அம்முயற்சி கைகூடாதென்கிறார். அதுவே வீடு –ஆத்மாநுபவமோக்ஷமென்பது கீழ்ச்சொன்னவதுவே. வீடுபேற்றின்பந்தானும் அது – அந்த மோக்ஷத்தைப் பெற்றால் வரும் ஸுகமும் அதுவே, தேறி –இப்படியாகத் தெளிந்து, எதுவேதானும் பற்றின்றி –ப்ரக்ருதி ப்ராக்ருத வஸ்துக்களில் இவைபோக்யமென்றும், இவை போகோபகரணமென்றும் இவைபோகஷ்தானமென்றும் நினைப்பதனாலுண்டாகிற பற்று அற்று, ஆது மிலிகள் ஆகிற்கில் –அதில் ருசிவாஸநைகளுமற்றவர்களாக ஆகப்பெற்றால், (அதாவது) கருமத்தையலுட்டித்து ஜ்ஞானத்தையுடையராய், கீதையில் இரண்டாமத்யாயத்தில் (55) * ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த்த மநோகதாந், ஆத்மந்யேவாத்மநா துஷ்ட ஸ்தித ப்ரஜ்ஞஸ் த்தோச்யதே * என்கிற ச்லோகத்திற் சொல்லுகிறபடி ஜ்ஞாந நிஷ்டாகாஷ்டையான ஸ்திதப்ரஜ்ஞாவஸ்தை பிறந்து யோகமும் நிலைநின்று ஆத்மஸாக்ஷாத்காரம் பண்ணப்பெற்ல், அதுவே வீடு –கீழ்ச்சொன்ன ஆக்மப்ராப்தியே மோக்ஷம். வீடுபேற்றின்பந்தானுமது –மோக்ஷஸித்தியில் வரும் ஸுகமும் அந்த ஆத்மாதுபவமே. தேறாது – இப்படி தெளியமாட்டாமல், எதுவேவீடு எது இன்பமென்று எய்த்தார் – மோக்ஷமாவது எது? மோக்ஷ ஸுகமாவது எது? என்று விசாரித்துக்கொண்டு கலங்கி நிற்பவர்கள், எய்த்தார் எய்த்தாரே –என்றும் கலங்கிய நிற்பவர்களென்கை. “நிராச்ரயமாக ஆத்மஸ்வரூபத்தை அநுஸந்திக்கை நிஷ்ப்ரயோஜநமென்கை“ என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்க. எம்பெருமானுக்கு ப்ரகாரபூதமாயல்லது ஆத்மா நுபவம் பண்ணலாகாதென்றபடி.

English Translation

Knowing this, with no attachments, empty yourself, for that indeed is liberation, and the joy of Heaven. Not knowing this, those who fire and ask, "What is liberation?", "Where lies joy?" will only fire and fire again

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்