விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நன்றாய் ஞானம் கடந்துபோய்*  நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து* 
    ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்*  உலப்புஇல் அதனை உணர்ந்துஉணர்ந்து*
    சென்றுஆங்கு இன்பத் துன்பங்கள்*  செற்றுக் களைந்து பசைஅற்றால்* 
    அன்றே அப்போதேவீடு*  அதுவே வீடு வீடாமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நன்றாய் ஆங்கு சென்று - ஆத்ம ஸ்வரூபத்தளவுஞ் சென்று
இன்பம் துன்பங்கள் செற்று களைந்து - ஸுகத்துக்கங்களுக்கு அடியான புண்ய பாபங்களையும் விட்டு
பசை அற்றால் - அவற்றில் ருசி வாஸகைகளும் கழியுண்டால்
அன்றே - அன்றைக்கே
அப்போதே - அந்த க்ஷணத்திலேயே

விளக்க உரை

ஒன்றாய்க்கிடந்த அரும்பெரும் பாழுலப்பிலதனை உயரந்துணர்ந்து -* திலதைலவத்தாரு வஹ்நிவத் * என்றாப்போலே என்னில் எண்ணெய் போலவும் கட்டையில் நெருப்புப் போலவும் பிரித்தெடுக்க முடியாதபடி சேதநனோடு சேர்ந்துகிடப்பதாய் அபரிச்செத்யமாயிருக்கிற ப்ரக்ருதி தத்துவத்தை நன்றாக வுணர்ந்து, உலகில் பாழ்நிலமாக ஓரிடமிருந்தால் அதுதன்னிலே நாம் இஷ்டமான பொருளை விளைத்துக்கொள்ளாகிறோமன்றோ, அதுபோல ப்ரக்ருதியில் போக மோக்ஷங்களை நாம் யதேஷடமாக விளத்துக்கொள்ளலாமென்பது பற்றி ப்ரக்ருதிக்கு பாழ் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது இவ்வளவென்று அளவிட முடியாதாதலால் உலப்பில்லாததாகக் கூறப்படுகிறது. (உலப்ப-முடிவு) பாட்டினடியிலேயிருக்கிற நன்றாயென்பதை இனிக் கொண்டு கூட்டி “நன்றாய் ஆங்கு சென்று“ என்றந்வயித்து, தன் பக்கலில் போக்ய தாபுத்தியைப் பிறப்பிக்கக்கடவதான அசித்திலே கால்தாழாமல் ஆத்மஸ்வரூபத்தளவுஞ் சென்று என்று பொருள்காண்க. இன்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து – அசித்தை த்யாஜ்யமென்று விட்டாலும் ஸுக துக்கங்களுக்கு ஹேதுவான புண்யபாபரூப கருமங்கள் கிடக்குமாகில் பின்னையும் ஸம்ஸாரந்தானெ, அது ஆகாமைக்காக அவற்றையும் விடவேணுமென்கிறது. அவற்றை விட்டாலும் ருசிவாஸநைகள் கிடக்குமாகில் பின்னையும் கருக்குழியிலே புக நேருமே, அது நேராமைக்காகப் பசையும் அறவேணுமென்கிறது. ஆக விஷயஸ்ன்னிதானத்தில் நின்றும் தப்பிப்போய் இந்திரியங்களையும் வென்று அசித்தத்வ்விவேகமும் பண்ணிப் புண்ணிய பாபங்களையுமுதறி ருசிவாஸனைகளையும வென்று அசித்தத்வ்விவேகமும் பண்ணிப் புண்ணிய பாபங்களையுமுதறி ருசிவாஸனைகளையும் விட்டால், அன்றே அப்போதே வீடு –அக்காலத்திலே அம்முஹூர்த்தத்திலே ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் நின்றும் விடுபடுகையுண்டாம். அதுவே வீடு வீடாமே – ஆத்மாநுபவ மோக்ஷமென்பது அதுவே, இதுவும் ஒரு புருஷார்த்தமாம், ஸர்வேச்வரன் ப்ராப்யனாமிடத்தில் அவனுக்கு ப்ரகாரமாய்க் கொண்டு ஆத்மாவும் ப்ராப்யமாகக் கடவதன்றோ, ஆகையாலே இதுவும் புருஷார்த்தமாமே யென்கிறார். ஆனால் கைவல்யமோக்ஷத்தை நிந்திப்பது எதனாலேயென்னில், இதற்கு நம்பிள்ளையருளிச் செய்வது காண்மின் -“தம்முடைய உத்தேச்யத்திலேகதேசத்தைப் புருஷார்த்தத்தில் சரமாவதியாக நினைத்திருக்கையாலேயிறே முன்பு இவர் இத்தைச் சிரித்திருந்தது“ என்று. எம்பெருமானைத் தவிர்த்து கேவலாத்மாநுபவத்தைச் செய்வதுதான் நிந்தனைக்கிடமானது என்றதாயிற்று.

English Translation

Go well beyond knowledge, and break the limit of the senses, contemplate the great endless continuum, repeadetly, contemplate the great endless continuum, repeatedly. Shed attachments and go beyond pain and plesure. That libertion, then and there, is the only one there is

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்