விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    யானும் தானாய் ஒழிந்தானை*  யாதும் எவர்க்கும் முன்னோனை* 
    தானும் சிவனும் பிரமனும்ஆகிப்*  பணைத்த தனிமுதலை*
    தேனும் பாலும் கன்னலும்*  அமுதும்ஆகித் தித்தித்து*  என் 
    ஊனில் உயிரில் உணர்வினில்*  நின்ற ஒன்றை உணர்ந்தேனே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனி முதலை - தானான தன்மையனாயும் சிவனாயும் பிரமனாயும் விஸத்ருதனானப்ரதான காரண பூதனும்.
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து - தனக்குப் பரமபோக்ய மாய்க் கொண்டு ரஸித்து
என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை - என்னுடைய சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வியாபித்துநின்ற ஆத்மாவை சரீரமாக யுடையனுமாய்
யானும் தானாய் ஒழிந்தானை - நானும் தானாய்விட்டவனான எம்பெருமானை
உணர்ந்தேன் - அறிப் பெற்றேன்.

விளக்க உரை

இவ்வாத்மா தனக்குப் பரபோயமென்னுமிடத்தையும் காட்டித் தந்தருளின படியையருளிச் செய்கிறாரிதில். இப்பாட்டின் முடிவிலுள்ள “நின்றவொன்றையுணர்ந்தேனே“ என்பதன் பொருளை முன்னம் தெளியவேண்டும். நின்றவொன்று என்கிறவிது ஜீவா த்மஸ்வரூபத்தச் சொல்லுமதரம். ஆனாலும் ஆச்ரயமாய் ப்ரகாரியான பரமாத்மாவளவும் சொல்லி நிற்கிறது. ஏனென்னில், யாதும் யவர்க்கும் முன்னோனென்றும், தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனிமுதலென்றும்...கீழே சொன்ன விசேஷணங்கள் பரமபுருஷனிடத்தில் அந்வயிக்கக்கூடுமேயல்லது ஆத்மஸ்வரூபத்தில் அந்வயிக்கமாட்டாவே. ஆத்மஸ்வரூபத்தின் துக்காட்டாதே பரமாத்மபர்யந்தமாகச் சொல்லிநிற்பதானது –அவ்வாத்மஸ்வரூபம் தனித்து நிற்கமாட்டாதே பரமாத்மாவைப் பற்றியே நிற்குமதென்கிற மருமத்தைக் காட்டுதற்காம். இப்படி பரமாத்மாவளவுஞ்செல்ல வாசகமிட்டிருந்தாலும் ஆத்மஸ்வரூபத்தளவிலே அர்த்தம் கொள்ளவேண்டும். * தேனும் பாலும் கன்னலும்முது மாகித்தித்தித்து * என்பதனால் இங்குச் சொல்லப்பட்ட போக்யத்தை எம்பெருமானுடையதுபோல் தோற்றும், அப்படி கொள்ளலாகாது. ப்ரகாரியான அவனுக்குச் சொன்னது ப்ரகாரத்தில் விவக்ஷையாலே யென்று உணர்க. ஆத்மாவிலே காட்டக்கண்ட தித்திப்பைப் பரமாத்மாவிலே யேற்றிச் சொன்னதாகக் கொள்க. யாதும் யவர்க்கும் முன்னோனை யென்றது – ஸகல சேதநாசேதங்களுக்கும் காரணபூதனையென்றபடி. இப்போது இது சொல்லவேண்டிய அவச்யமென்ன? ஆத்மாவினுடைய போக்யதைதானே சொல்லவேண்டும், ஜகத்காரணத்வம் எதற்காகச் சொல்லுகிறது என்னில், குறிக்கொண்டு கேண்மின், இங்கு ஜகத்காரணத்வம் எப்படி சொல்லவேண்டியதன்றோ, அப்படியே, * தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனிமுதலை * என்பதும் சொல்லவேண்டியதன்றுதான், ஆயினும் இவை எதுக்குச் சொல்லியிருக்கிறதென்னில், விமுகரானவர்களைக் கர்மாநுகுணமாக ஸ்ருஷ்டித்துவிட்டான், ஐச்வர்யகாமரான ப்ரஹ்மருத்ராதிகளுக்கு ஐச்வர்யங்களைக் கொடுத்து அதிகாரபதவிகளைக் கொடுத்துவிட்டான், என்னளவிலோவென்னில், அங்ஙனே செய்யாதே, இவ்வாத்மா தனக்கு அந்யார்ஹமாய் போக்யமாயிருக்கிறபடியைக் காட்டித்தந்தான் என்பது இங்கே விவக்ஷிதமென்றுணர்க. என்ஊனில் உயிரில் உணர்வில் நின்றவொன்றை – என் சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வியாபித்திருக்கின்ற ஆத்மாவைத் தனக்குச் சரீரமாகவுடையவனை என்றபடி. பாட்டின் முதலிலேயிருக்கிற “யானுந்தானாயொழிந்தானை” என்பது இங்கே கூட்டிக் கொள்ளத்தக்கது. ஆத்மஸ்வரூபத்தைச் சரீரமாக வுடையவனாகையாலே யானும் தானாய்விட்டானென்ற தாயிற்று.

English Translation

The Lord who became me was there before all things and beings. The first-cause who cleaved himself, and became Brahma and Siva, -sweet as honey, milk and sugarcane juice, stands in my consciousness, in my life, and in my body. I have realised him

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்