விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உணர்வில்உம்பர் ஒருவனை*  அவனது அருளால் உறற்பொருட்டு*  என் 
    உணர்வின்உள்ளே இருத்தினேன்*  அதுவும் அவனது இன்அருளே*
    உணர்வும் உயிரும் உடம்பும்*  மற்று உலப்பிலனவும் பழுதேயாம்* 
    உணர்வைப் பெறஊர்ந்துறஏறி*  யானும் தானாய் ஒழிந்தானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உணர்வில் உம்பர் ஒருவனை - அயர்வறும்மரர்களதி பதியை
அவனது அருளால் - அவனுடைய க்ருபையாலே
உறல் பொருட்டு - கிட்டுகைக்காக
என் உணர்வின் உள்ளே - என்னுடைய அபேக்ஷையாகிற ஞானத்துக்குள்ளே
இருத்தினேன் - இருக்கச் செய்தேன்

விளக்க உரை

எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே தன் விஷயத்தில் இசை வையுமுண்டாக்கி என்னோடே கலந்து அந்தக் கலவி நிலைத்து நிற்பதற்காக, விலக்ஷணமாய்த் தனக்கு அநந்யார்ஹமான ஆத்மஸ்ரூபத்தையுங் காட்டிக்கொடுத்தருளினா னென்கிறார். உணர்விலும்பரொருவனை என்றதற்கு * அயர்வறு ம்மரர்களதிபதியானவனை யென்பது தேர்ந்தபொருள். உணர்விலும்பர் என்றது உணர்வின்மிக்க நித்யஸூரிகளென்றபடி. அவர் களிற்காட்டில் வேறுபடாத வொருவன் எனவே. அவர்களது ஸத்தை முதலியவை தன்ன தீனமாயிருக்கையாலே ப்ராப்திக்குறுப்பாக அவ்வடியார்களைக் கூட்டிப் பேசுகிறாரென்றுணர்க. அவனதருளாலுறல்பொருட்டு –அவனுடைய ப்ரஸாதத்தாலே அடைந்தற்பொருட்டுறுணர்க. அவனதருளாலுறல்பொருட்டு –அவனுடைய ப்ரஸாதத்தாலே அடைதற்பொருட்டு. என்னுணர்வினுள்ளேயிருந்தினேன் – அவனை என்னுடைய ஞானத்துக்கு விஷயமாக்கினேன் – இச்சத்தேனென்றபடி. இந்த இச்சைதானும் கம்மடியாக வந்த்தன்று என்கிறார்மேலே அதுவுமனதின்னருளேயென்று. இந்த இச்சை தோன்றினதும் அவன் ப்ரஸாதத்தாலே யென்றபடி. இப்பதிகத்தில் முதலிலிருந்து இரண்டரைப்பாட்டாலே தன்னையனுபவித்து அனந்தம் ஆத்மஸ்வரூபத்தைக் காட்டிக் கொண்டுத்தானென்று நம் ஆசார்யர்கள் நிர்வஹிப்பதுண்டே, அதன்படி இரண்டரைப் பாட்டு அற்றது. இனிமேல் ஆத்மஸ்வரூபவைலக்ஷண்யத்தைக்காட்டிக் கொடுத்தமை சொல்லுகிறது. உணர்வுமுயிருமுடம்பும் மற்றுலப்பினவும் பழுதேயாமுணர்வைப் பெறவூர்ந்து – விஷயங்களைப்பற்றின ஞானமும் பிராணனும் சரீரமும மற்றும் அபரிச்சேத்யங்களான ப்ரக்ருதி விகாரங்களும் ப்ரக்ருதியும் ஹேயம் –என்னுமிவ்வறிவைப் பெறும்படி நடத்தினபடியைச் சொல்லுகிறது. இவையெல்லாம் அபுருஷார்த்தமென்று உணர்த்தி என்றபடி. இறவேறி –முடியப்போய் என்பது பொருள். “ஜ்ஞாநாநந்த ஸ்வரூபமாய் பகவச்சேஸதைகரஸமாயிருக்கும் ஆத்மவஸ்து“ என்கிற எல்லை நிலமான ஞனத்தையுண்டாக்கி யென்றபடி. யானும் தானாயொழந்தான் – அவ்வளவோடும் நில்லாமல்என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லாம்படி தனக்கு ப்ரகாரமாயக் கொண்டு சேஷம் என்னுமிடத்தையும் காட்டித் தந்தானென்கை. இத்தால் அபேதச்ருதிகளுக்கு அத்வைதிகள் நிர்வஹிக்கிறபடியன்றிக்கே நம்மவர்கள் நிர்வஹிக்கிற புடை காட்டப்பட்டதாயிற்று.

English Translation

To attain by his grace that celestial body of knowledge, I placed him in my heart, that too by his sweet grace. He made me realise that consciousness, life, body and possessions are all useless, then became myself

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்