விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடியேன்உள்ளான் உடல்உள்ளான்*  அண்டத்துஅகத்தான் புறத்துள்ளான்* 
    படியேஇது என்றுஉரைக்கலாம்  படியன்*  அல்லன் பரம்பரன்*
    கடிசேர் நாற்றத்துள்ஆலை*   இன்பத் துன்பக் கழிநேர்மை* 
    ஒடியா இன்பப் பெருமையோன்*  உணர்வில்உம்பர் ஒருவனே    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துன்பம் கழி நேர்மை - கோதுகழிந்த ஸாரமான பாகம் போலிருக்கிற
ஒடியா - விச்சேத மற்று நித்யமான
இன்பம் பெருமையோன் - ஆனந்தமயனாய்
உணர்வில் உம்பர் ஒருவன் - அறிவு விஷயத்தில் மேற்பட்டிருப்பவனான ஒருவன்
அடியேன் உள்ளான் - பட்டிருப்பவனான ஒருவன் ஆத்மாவில் அந்தராத்மாவாயிரா நின்றான்

விளக்க உரை

அடியே னென்கிற ஆத்மாவே அடியேயென்கிற சொல்லுக்குப் பொருளாகும். “அடியேன் செய்யும் விண்ணப்பமே“ என்கிற விடத்தை யெடுத்துக் கொள்வோம், தேஹமின்றிக்கே வெறும் ஆத்மா விண்ணப்பம் செய்யமுடியுமாதலால் இங்கு வெறும் ஆத்மாவை அரத்தமாகக் கொள்வதற்கில்லை. எந்த இடத்திலுமிப்படியே. *அடியேன் சிறிய ஞானத்தன்* (திருவாய்மொழி 1-6-7) என்கிறவிடத்தில் ஞானத்த னென்று ஞானமுடைமை சொல்லி யிருப்பதனால் அது தேஹத்திற்கு ஆத்மாவைத்தானே சொல்லியாக வேண்டுமென்று சிலர் ப்ரமிக்கக்கூடும், அங்கும் தேஹவிசிஷ்டனான ஆத்மாவையே சொல்லுகிறது, ஏனெனில் காண்பானலற்றுவன் என்னும் க்ரியையிலே அச்சொல் அந்வயிக்க வேண்டுதலால் வெறும் ஆத்மா அலற்ற முடியாதாகையாலே. ஆகவே அடியேனென்ற சொல் எந்த விடத்தலும் தேஹ விசிஷ்டனான ஆத்மாவையே சொல்லி நிறகுமென்பது திண்ணமாயிற்று. * ஒருவனடியேனுள்ளானே* என்ற கீழ்ப்பாட்டிலும்படியே. * அடியேனுள்ளா னுடலுள்ளான் * என்னுமிவ்விடத்தில் மாத்திரம் அடியே னென்பதற்கு வெறும் ஆத்மாவே அர்த்தமாகவேண்டிய நிர்ப்பந்தமுள்ளது ஆத்மாவுக்கு விசேஷணபூதமான தேஹத்திற்கு வாசகமான சொல் உடலென்பது தனிப்பட்ட இருப்பதனால் அடியேனில் தேஹத்தைச் சேர்த்து அர்த்தங் கொள்ளவேண்டிய அவச்யமில்லை. எம்பெருமான் ஜீவாத்மாவையும் உடல்பொருளையும் அநுப்ரவேசித திருக்குமவன் என்று சொல்ல வேண்டுவது இங்கு விவக்ஷிதம். உடலுள்ளானென்பதனால் ஜடப்பொருளை அநுப்ரவேசித்திருக்குவனென்பது சொல்லிற்றாயிற்று. “ஜீவாத்மாவை அநுப்ரவேசித்திருக்குமவன்“ என்று விவக்ஷிதமான பொருளுக்கு அடியேனுள்ளானென்று வாசகமிடப் பட்டிருக்கின்றது. ஆத்மா அஹமர்த்தமாகையாலே என்னுள்ளானென்று சொல்லி யிருக்கலாம், அப்போதும் ஆத்மாவிலுள்ளா னென்னும்பொருள் தேறிவிடும், ஆனால் ஆழ்வார் அப்படியருளிச் செய்யாமல் அடியேனுள்ளா னென்றருளிச் செய்திருக்கையாலே “ஆத்மாவென்றும் அடியேனென்றும் பர்யாயம்“ என்பது ஆழ்வார் திருவுள்ளமென்று அறுதியிடலாகிறது. இந்த மருமம் குருகலவாஸ பாக்கியமில்லாதார்க்கு அறிவரிது. திருக்கோட்டியூர் நம்பி ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில்கேட்ட மஹார்த்தமிது. இது ஆழ்வான் வழியாக ஸ்வாமிக்கு நிதிபோல் கிடைத்தபடியால் இந்த மஹார்த்தம் திருவுள்ளத்திலேயே ஊறியிருந்து கீதாபாஷ்யத்தில் வெளியிடப்பெற்றது. கீதையில் (7-10) * சதுர்விதா பஜந்தே மாம் ஜகாஸ் ஸுக்ருதி நோர்ஜுந, ஆர்த்சோ ஜிஜ்ஞாஸுரத்தார்த்தீ ஜ்ஞாநீ ச * என்றவிடத்தில் ஜ்ஞாநீ என்பதற்கு “விஷ்ணோ தத்வ்வித்“ என்று சங்கரசார்யர் எழுதிவைத்த பொருள், நம் ஸ்வாமி அப்பொருளை ஒன்றாக எண்ணாது “பகவச் சேஷதைகரஸ ஆத்மஸ்வரூபவித் ஜ்ஞாநீ“ என்றருளிச் செய்தார். இது ஆழ்வார் ஸ்ரீஸூக்தியாகிற அமுத வெள்ளத்தில் ஆழ்ந்திருப்பது காரணமாகவே யாகும். ஆக இங்கு அடியேனுள்ளானென்றது ஆழ்வாரது ஆத்மாவில் வியாபித்தவ னென்கை. உடலுள்ளானென்றது – அவருடைய தேஹத்திலும் வியாபித்துள்ளானென்றபடி. அண்டத்தகத்தான் புறத்துள்ளான் – அண்டத்துக்குட்பட்ட பதார்த்தங்களோடு வெளிப்பட்ட பதார்த்தங்களோடு வாசியற எங்குமுள்ளானென்றபடி. இதுவேபடி யென்றுரைக்கலாம்படியனல்லன் – இதற்கு இரண்டு வகையாகப் பொருள்கொள்ளலாம், -இன்னபடிப்பட்டவனென்று உரைக்க வெண்ணாதவன். என்றும், ஸர்வாத்மநா தன்னோடிடாத்திருப்பதோர் உபமானத்தை யுடையனல்லாதவன் என்றும். “ஸர்வகதமுமாய் ஸர்வநிர்வாஹமுமாயிருப்பதொரு வஸ்துவுண்டாகிலிறே ஒப்புச் சொல்லலாவது“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி, பரம்பன் –மேலான வற்றுக்கெல்லாம் மேலானவன் என்று சொல்லாமத்தனை. கடிசேர்நாற்றத்தென்று தொடங்கிப் பின்னடிகளின் கருத்து ஆனந்தமயனென்கை. அல்பத்வமும் அஸ்திரத்வமுமாகிற கோதுகழந்த ஆனந்தமே வடிவானவனென்பது பரமதாற்பரியம். “அநாக்ராத துக்ககந்த நித்யஸித்த நிரவதிகாநந்தத்தை யுடையவன்“ என்பது ஆறாயிரப்படி

English Translation

The Lord in my heart is also in my body and in the world and beyond, Celestial Lord beyond pain and pleasure, he defies all definition. The celestials body of knowledge the glory of eternal joy, he has the nature of pure fragrant dew-fresh flowers

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்