விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆமையின்முதுகத்  திடைக்குதிகொண்டு*  தூமலர்சாடிப்போய்த்* 
    தீமைசெய்து இளவாளைகள்*  விளையாடுநீர்த் திருக்கோட்டியூர்*
    நேமிசேர்தடங்கையினானை*  நினைப்புஇலா வலிநெஞ்சுஉடை* 
    பூமிபாரங்கள்உண்ணும் சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இள - இளமைபொருந்திய
வாளைகள் - ‘வாளை’ என்னும் மீன்கள்
ஆமையின் - ஆமைகளினுடைய
முதுகத்திடை - முதுகின்மேல்
குதிகொண்டு - குதித்துக்கொண்டும்

விளக்க உரை

உலகத்தில் அறிவுடையார் சோற்றை உண்ணவேணும், அறிவிலிகள் புல் முதலிவற்றை உட்கொள்ளவேணும் என்பது விவாதமற்ற விஷயம். திருக்கோட்டியூ ரெம்பெருமானை நெஞ்சாலும் நினையாத மனிதர் அறிவற்றவர்கள் ஆதலால் அவர்கள் புல்லைத்தான் தின்னவேணும்; அங்ஙனமன்றி, அவர்கள் முறை தப்பித் தின்னுஞ் சோற்றைப் பிடுங்கி யெறிந்துவிட்டு, அவர்கள் வயிற்றில் புல்லையிட்டு நிறையுங்கள் என்கிறார். முன்னடிகளிற் கூறியது - தன்மை நவிற்சி. குதிகொண்டு = குதி - முதனிலைத் தொழிற்பெயர். சாடுதல் -அலைத்தல். நேமி-வடசொல். பூமிபாரம் திணித்தல் - அடைத்தல், துறுத்தல்.

English Translation

The Lord resides in Tirukkottiyur surrounded waters where young Valai-fish jump on the backs of tortoises, brush against fresh lotuses and play mirthfully. Hard-hearted men, who have no thought of the Lord wielding the discus in his big hand, are like dead weights. Take away the food they eat and stuff their mouths with hay!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்