விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுடர்ப்பாம்பணை நம்பரனை*  திருமாலை* 
    அடிச்சேர்வகை*  வண்குருகூர்ச் சடகோபன்*
    முடிப்பான் சொன்னஆயிரத்து*  இப்பத்தும் சன்மம் 
    விடத்*  தேய்ந்தற நோக்கும்*  தன்கண்கள் சிவந்தே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முடிப்பான் சொன்ன  - ஸம்ஸாரஸம்பந்தத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த
ஆயிரத்து - ஆயிரத்தினுள்
இ பத்தும் - இப்பதிகம்
சன்மம் அற தேய்ந்து விட - பிறப்பானது நன்றாகத் தொலைந்துபோம்படி
தன் கண்கள் சிவந்து நோக்கும - தன் கண்கள் சிவக்கப்பார்க்கும்

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்கைக்குப் பயனாக ஜன்மஸம்பந்த நிவ்ருத்தியை யருளிச் செய்கிறார். பர்யங்க வித்யையிற் சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வான் மடியிலே பெரியபிராட்டியாரோடே யெழுந்தருளியிருக்கக் கண்டநுபவிக்கையே முக்தர்கள் பெறும் பெறாதலால் அது முதலடியால் ஒருவாறு ஸூசிதமாகிறது. “அடிச்சேர்வகை“ என்பதைச் சடகோபனிடத்தே அந்வயித்து “திருவடிகளிற்சேருகையே தமக்கு ஸ்வபாவமான ஆழ்வார்“ என்பது ஒரு யோஜரை. “அடிச்சேர்வகை முடிப்பான் வண்குருகூர்ச் சடகோபன் சொன்ன“ என்று இயைத்து, திருவடிகளிலே சேரும்படியைத் தலைக்கட்டிக் கொள்ளுகைக்காக அருளிச் செய்த ஆயிரம் –என்பது மற்றொரு யோஜநை. அசேதநமான பதிகத்திற்குக் கண்களிருப்பதாக வைத்து “தன்கண்கள் சிவந்து நோக்கும்“ என்றது –ஜந்மவிநாச ஹேதுத்வத்தால் திருவாய்மொழியைப் புருஷ ஸமாதியாலே சொன்னபடி.

English Translation

This decad of the thousand songs by Satakopan of kurugur city addressing the Lord on hooded couch will secure the grace of the red-eyed Lord cutting rebirth

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்