விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அருள்தான் இனியான் அறியேன்*  அவன்என்உள்* 
    இருள்தான்அற*  வீற்றிருந்தான் இதுஅல்லால்*
    பொருள் தான்எனில்*  மூவுலகும் பொருளல்ல* 
    மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் உன் இருள் அற - எனது உள்ளிருள் தொலையும்படி
வீற்றிருந்தான் - (எண்ணுள்ளே) எழுந்தருளியிராநின்றான்,
இது அல்லால் - இவ்விருப்புத்தவிர
பொருள் தான் எனில் - (அவனுக்கு) வேறு புருஷார்த்த முண்டோவென்னில்
மூ உலகும் பொருள் அல் - த்ரிலோகாதிபதித்வமும் ஒரு பொருளாகவுள்ள தன்று

விளக்க உரை

ஸர்வேச்வரன் தம் பக்கலிலே இப்படி அளவு கடந்த வியாமோஹத்தைப் பண்ணுகையாகிறவிது. ஆலோசித்துப் பார்த்தால் அஸம்பாவிதம்போல் தோன்றுகையாலே இது மெய்யாயிருக்க வழியில்லை, மருளோ? மாயமயக்கோ? என்று அலைபாய்கிறார். அருள்தான் இனியானறியேன் –என்னுடைய இந்த்ரியச் செருகையடக்கினதையும் ஒரருளாக மதிக்கமாட்டே னென்றபடி. “என்னுள்ளே யிருந்தருளின விவ்வருளல்லது மற்றோருளை நான ஒர்ருளாக மதியேன்“ என்பது ஆறாயிரப்படி. அவன் என்னுள் இருள்தானற –வீற்றிருந்தான் –அப்பெருமான் என்னுடைய ஹ்ருதயத்தில் அஜ்ஞாநாந்தரகாரமெல்லாம் போம்படி, பெறாப்பேறு பெற்றானாய் அப்பெருமை தோற்ற விராநின்றான், இனியெனக்கு வேறொன்று தோற்றுமோ வென்றபடி. இதுவல்லால் பொருள்தானெனில் மூவுலகும் பொருல்ல – இதற்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுள்ளன. மூவுலகங்களையும் ஆளப்பெறுகையாகிற செல்வத்தை நாட்டார் பெருஞ் செல்வமென்று நினைத்திருப்பர்கள், எம்பெருமான் என் ஹ்ருதயத்தில் புகுந்த பின்பு. இதையே பெருஞ் செல்வமாகக் கொண்ட நான் அந்த த்ரிலோகாதிபத்யத்தை ஒரு பொருளாக மதிக்கமாட்டேனென்கிறார் என்று திருமாலையாண்டானருளிச் செய்ததாம், இப்படி ஆழ்வாருடைய எண்ணமாகச் சொல்லுவதிற்காட்டிலும் எம்பெருமானுடைய எண்ணமாகச் சொல்லுவதே பிரகரணத்திற்குச் சேருமென்று திருவுள்ளம்பற்றிய எம்பெருமானார் –“என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்தெழுந்தருளியிருக்கிற விருப்பொழிய * வீற்றிருந்தேழுலகும் தனிக்கோல் செல்லவிருக்குமிருப்பையும் தனக்கொரு சரக்காக நினைத்திருக்கின்றிலன் எம்பெருமான்” என்றருளிச் செய்வராம். மருள் தானீதோ? –ஸர்வேச்வரன் ஒரு ஸம்ஸாரி சேதனைப்பெற்று இங்ஙனே களித்திருத்தானென்றால் இது கூடுவதன்றே, நம்பத்தகுந்த்தன்றே, ஆகவே இது என் அவிவேகத்தாலே சொல்லுகிறேனோ? * ஸ்வப்நோ நு மாயா நு மதிப்ரமோநு. * மாயமயக்குமயக்கே – அல்லது அந்த மாயப்பிரான் தானே தன்னுடைய மயக்குகளை யிட்டு இங்ஙனே மயக்கிப் பேசுவிக்கிறானோ? இங்கே ஈடு, “நெடுநாள் ப்ரக்ருதியையிட்டு அறிவு கெடுத்தான், இப்போது தன் வ்யாமோஹத்தாலே என்னை ப்ரமிப்பித்தான்.“

English Translation

More precious than the three worlds, he resides in me dispelling darkness. What a strange wonder this is! More than this, what grace can there be?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்