விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உரகமெல்அணையான்கையில்*  உறைசங்கம்போல்மடஅன்னங்கள்* 
    நிரைகணம்பரந்துஏறும்*  செங்கமலவயற் திருக்கோட்டியூர்*
    நரகநாசனைநாவிற் கொண்டுஅழையாத*  மானிடசாதியர்* 
    பருகுநீரும்உடுக்குங்கூறையும்*  பாவம்செய்தனதாம்கொலோ!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உரகம் மெல் - திருவனந்தாழ்வானை ஸுகுமாரமான
அணையான் - படுக்கையாகவுடைய எம்பெருமானது
கையில் உறை - திருக்கையில் உள்ள
சங்கம் போல் - ஸ்ரீ பாஞ்சஜந்யம்போல் (வெளுத்த)
மட அன்னங்கள் - மடப்பம்பொருந்திய ஹம்ஸங்களானவை

விளக்க உரை

நாமம், ரூபம் என்ற இரண்டையுமுடைய எல்லாப் பொருள்களிலும் ஒவ்வொரு ஜீவன் அதிஷ்ட்டதனா யிருக்கின்றனென்பதைப் பிரமான பலத்தினாற் கொள்ளவேணும்; தும்பு முதலிவற்றில் உள்ள ஜீவாயிஷா நத்தை நாங்ககாணாதொழிவதற்குக் காரணம் - நமது கருமமடியாகப் பிறந்துள்ள ஞானச்சுருக்கமேயாம்; ஆகையாலே, “பருகு நீரு முடுக்குங் கூறையும் பாவஞ் செய்தனதான் கொலோ” என்பது பொருந்துமென்க. உலகத்தில் ஒருவன் நிஹீக புருஷனுக்கு ஆட்பட்டானாகில், அவன் நன்மையியழந்து தீமையையே பெறுவதும். விலக்ஷண புருஷனுக்கு ஆட்பட்டவன் தீமையைத் தவிர்த்து நன்மையையே பெறுவதும் சாஸ்திரங்களிற் கைகண்ட அர்த்தமாகும்; அப்படி தீமைக்கு ஹேதுமான நிஹீகபுருஷசேஷத்துவம் நேருவதற்குக் காரணம் அவனுடைய பாபமே யென்பதும் சாஸ்திரஸித்தம். ஆனதுபற்றி திருக்கோட்டியூரெம்பெருமானை அநுஸந்திக்கமாட்டாத நிஹீகபுருர்களுக்குச் சேஷப்பட்ட பருகுநீரும் உடுக்குங்கற்றையும் பாவம்செய்தனவோ தான்! என்கிறார்.

English Translation

The serpent-reclining Lord resides in Tirukkottiyur, surrounded by fields where graceful swans resembling the conch in his lotus-like hand throng the red-lotus lake. Having gained the birth of a human life, if one does not call ‘destroyer-of-hell’ and take the Lord’s name, surely the water one drinks, and the cloth one wears have done much sin, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்