விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சோலைத் திருக்கடித்தானத்து*  உறைதிரு 
    மாலை*  மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*
    பாலோடு அமுதுஅன்ன*  ஆயிரத்து இப்பத்தும்* 
    மேலை வைகுந்தத்து*  இருத்தும் வியந்தே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாலோடு அமுது அன்ன - பாலும் அமுதும் கலந்தாற்போல் பரம போக்யமான
ஆயிரத்து - ஆயிரத்தினுள்ளே
இ பத்தும் - இப்பதிகம்
மேலை வைகுந்தத்து - ஸர்வோத்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே
வியந்து இருத்தும் - உகந்து இருக்கச் செய்யும்.

விளக்க உரை

இப்பதிகமானது தன்னைக் கற்றவர்களைத் தானே திருநாட்டிலே கொண்டு போய்வைக்குமென்று பயனுரைத்துத் தலைகட்டுகின்றார். இப்பாட்டின் ஆறாயிரப்படி ஸ்ரீஸூக்தி பரம போக்யம், - “சோலைத் திருக்கடித்தானத்துறை திருமால் கவிக்கு ப்ரதி பாத்யன், மதிள் குருகூர்ச்சடகோபன் கவிப்பாடுகிறானானால் இவை எங்ஙனே யிருக்கின்றன!, இவை வல்லாரை எம்பெருமான ஒரு க்ஷணம் பிரியில் தரிக்கமாட்டானென்கிறார்.“ என்று. பாலோடமுதன்ன என்ற விடத்திற்கு ஆளவந்தார் அருளிச் செய்வதொரு இன்சுவைப் பொருள்கேளீர், எம்பெருமான் விஷயமும் ஆழ்வார் ஸ்ரீஸூக்தியுமாகவன்றோ திருவாய் மொழியுள்ளது, இதில் எம்பெருமான் விஷயமானது பால், ஆழ்வார் ஸ்ரீஸூக்தியானது அமுது. இப்படி வாச்யவாசகங்கள் சேர்ந்திருப்பதானது பாலும்முதும் சோந்தாற்போன்றதாம். இப்பத்தும் வியந்து மேலைவைகுந்தத்திருத்தும் – “ஸம்ஸார நிலத்திலே இத்தை அப்யஸிப்பானொருவணுண்டாவதே!“ என்று வியப்பாம். அசேதமாகிய பதிகத்திற்கு வியப்புண்டாகுமோவென்று சங்கிக்கவேண்டா, பதிகத்தினால் ப்ரஸன்ன்னாகின்ற எம்பெருமானுடைய செயலே பதிகத்தின் மேலேற்றிக் கூறப்பட்டதென்க.

English Translation

This decad of the thousand songs, sweet as milk and honey, by walled kurugur city's Satakopan on Tirumal in good Tirukkadittanam will secure the high Vaikunta, wonders!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்