விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அற்புதன் நாராயணன்*  அரி வாமனன்* 
    நிற்பது மேவி*  இருப்பது என்நெஞ்சகம்*
    நல்புகழ் வேதியர்*  நான்மறை நின்றுஅதிர்* 
    கற்பகச் சோலைத்*  திருக்கடித் தானமே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மேவி இருப்பது என் நெஞ்சகம் - பொருந்தியிருப்பது என்னெஞ்சினுள்ளே,
நிற்பது - அதற்காகவந்து நிற்பது (எவ்விடத்திலென்னில்)
நல் புகழ் வேதியர் - புகழ்மிக்க வைதிகருடைய
நால் மறை - நான்கு வேதங்களும்
நின்று அதிர் - நிலைநின்று முழங்கும்படியாய்

விளக்க உரை

ஆழ்வார்தம்மைப் பெறுமளவும் எம்பெருமான் திருக்கடித்தானத்திலே நின்றருளினான், இவர்தம்மைப் பெற்று ஸம்ச்லேஷித்த பிறகு நிற்பதுமிருப்பதும் இவர்தம் நெஞ்சிலேயாயிற்று என்கிறது இப்பாட்டு. அற்புதன் நாராயணன். அரி வாமணன் நிற்பது – (எங்கேயென்றால்) நற்புகழ்வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகன் சோலை திருக்கடித்தானமே, (அவன்றான்) மேவியிருப்பது (எங்கேயென்றால்) என்னெஞ்சகம் –என்றிங்ஙனே ஒரு அந்வயக்ரமம். நற்புகழ்வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக்கடித்தானத்து அற்புதன். நாராயணன் அரிவாமனன் நிற்பதும் மேவியிருப்பதும் என்னெஞ்சகம் – என்றிங்ஙனே மற்றோரந்வயக்ரமம். மூன்றாவதான வொரு யோஜனையுமுண்டு, அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பதும் மேவியிருப்பதும் என்னெஞ்சகத்திலும் திருக்கடித்தானத்திலும் – என்று.

English Translation

The wonder-Lord Narayana-Hari, is Vamana residing in my heart. The sound of Vedic chants reverberates through the groves of kalipa trees in Tirukkadittanam

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்