விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாயப்பதிகள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    மாயத்தினால் மன்னி*  வீற்றிருந்தான்உறை*
    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்துள்* 
    ஆயர்க்குஅதிபதி*  அற்புதன்தானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆயர்க்கு அதிபதி - கோபாலர் தலைவனாய்
அற்புதன் தான் - ஆச்சர்யபூதனான பெருமான் தான்
தாயப் பதிகள் எங்கெங்கும் தலை சிறந்து - தனக்கு அஸாதாரணமான திருப்பதிகள் எல்லாவிடத்திலும் சிறப்பமைந்து
மாயத்தினால் - தன்னுடைய இச்சையினாலே
மன்னி வீற்றிருந்தான் - பொருந்தியெழுந்தருளி யிருப்பவன்
 

விளக்க உரை

திருக்கடித்தாமொன்றேயோ அவனுக்கு தாய்ப்ராப்தம்? எல்லாத் தலங்களுமே தாயப்ராப்தமன்றோவென்ன, அன்றென்று சொல்லமுடியாது, ஆனாலும் என்னோடே கிட்டுகைக்குறுப்பான தலமென்று திருக்கடித்தானத்திலே விசேஷாபிமானங் கொண்டிருக்கிறானென்கிறார். தலைச்சிறந்த தாயப்பதிகள் எங்கெங்கும் மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் –திவ்ய தேசங்களில் சிறியது பெரியதென்கிற வாசியின்றிக்கே எந்தத் திருப்பதியானாலும் அது மிகச் சிறந்தது, அவை ஒவ்வொன்றும் தாயப்பதியெ. (அதாவது-அஸாதாரணஸ்தலமே யென்றபடி) அப்படிப்பட்ட எல்லாத் திருப்பதிகளிலுமே பொருந்தி வாழ்பவன்தான் எம்பெருமான், ஆனாலும், திருக்கடித்தானத்திலிருப்பு அத்புதம்! அத்புதம்! என்னவேண்டுமத்தனை.

English Translation

The Lord who lives in many good resorts is the chief of cowherd-clan and the eternals. He resides in godly company, in Tirukkadittanam, what a wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்