விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தான நகர்கள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    வான்இந் நிலம்கடல்*  முற்றும் எம்மாயற்கே*
    ஆனவிடத்தும் என் நெஞ்சும்*  திருக்கடித் 
    தான நகரும்*  தனதாயப் பதியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தானம் நகர்கள் முற்றும் - வாஸஸ்தானமான நகரங்கள் முற்றவும்
தலை சிறந்து - மிக்க சிறப்பமைத்து
எம்மாயற்கே ஆன இடத்தும் - எம்பெருமானுக்கே ஆயிருக்கைச் செய்தேயும்
என் நெஞ்சும் - எனது நெஞ்சமும்
திருக்கடித்தானம் நகரும் - திருக்கடித்தான மென்கிற திருப்பதியும்

விளக்க உரை

எம்பெருமானுக்கு ஸ்தானமான விலக்ஷண நகரங்கள் பல பல வுண்டா யிருக்கச் செய்தேயும் என்னுடைய நெஞ்சையும் திருக்கடித்தானத திருப்பதியையும் தனக்கு தாய ப்ராப்தமான ஸ்தானமாகக் கொண்டு விரும்பி யிருப்பதாக அருளிச் செய்கிறாரிதில். எம்பெருமானுக்குப் பரமபோக்யமாக அமைந்த வாஸ ஸ்தானங்களுக்கு ஒரு குறையுண்டோ? கணக்கு வழக்குண்டோ? மேலுலகங்களிலும் இந்நிலவுலகத்திலும் கடலிலும் ஆகக் கண்டவிடங்களிலுமெல்லாம் மிகச் சிறந்த இருப்பிடங்கள் இரக்கச் செய்தேயும் அவற்றில் ஆத்ரமுடையனல்லன் எம்பெருமான், என்னெஞ்சையும் என்னெஞ்சில் வாஸத்திற்கு ஸாதனமாயிருந்த தீருக்கடித்தானப் பதியையுமே தனக்கு தாயப்ரப்தமான ஸ்தானமாக விரும்பியிரா நின்றான் என்றாராயிற்று.

English Translation

The Lord has many good city-resorts, in the sky, on Earth and in me ocean, yet he has chosen my lowly heart and Tirukkadittanam, as his abodes

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்