விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூத்தஅம்மான்*  கொடியேன்இடர் முற்றவும்* 
    மாய்த்தஅம்மான்*  மதுசூத அம்மான்உறை*
    பூத்தபொழில்தண்*  திருக்கடித் தானத்தை* 
    ஏத்தநில்லா*  குறிக்கொள்மின் இடரே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மதுசூத அம்மான் - மதுஸூதனப் பெருமானானவன்
உறை - எழுந்தருளியிருக்குமிடமாய்
பூத்த பொழில் - பூத்த சோலைகளையுடைத்தான
தண் திருக்கடித்தானத்தை - குளிர்ந்த திருக்கடித்தானப்பதியை
ஏத்த - துதித்த வளவிலே

விளக்க உரை

திருக்கடித்தானத் தோடும் எம்பெருமான் தம் திருவுள்ளத்திலே புகுந்தானென்றவாறே அத்தரிருப்பதியானது ஆழ்வார் திருவுள்ளத்திலே அந்தர்த்தானமாகிவிட்ட தென்றும் தனியே அதிருப்பதி கிடையாதென்றும் சிலர் நினைக்கக் கூடமாதலால் அந்த நினைவு நீங்குமாறு, திருக்கடித்தானத்தை எல்லாரும் ஆச்ரயியுங்கோளென்கிறார். ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பு அவை அபிமதங்களாயிருக்கும்“ என்கிற ஸ்ரீ வசநபூஷண திவ்ய ஸூக்தியின்படியே எம்பெருமானுக்கு திவ்ய தேசாபிமாநமும் குறையற்றதேயன்றோ.

English Translation

The Lord of Lilas, Madhusudana, destroyed my woes to the end, He lives in cool fragrant Tirukkadittanam, worshipping him will end all our woes, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்