விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எல்லியும் காலையும்*  தன்னை நினைந்துஎழ* 
    நல்ல அருள்கள்*  நமக்கேதந்து அருள்செய்வான்*
    அல்லிஅம் தண்ணம்துழாய்*  முடிஅப்பன்ஊர்* 
    செல்வர்கள் வாழும்*  திருக்கடித் தானமே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல்ல அருள்கள் - பரம க்ருபைகளை
நமக்கே தந்து - நமக்கே அஸாதாரணமாகச் செய்து
அருள் செய்வான் -  அனுக்கிரஹம் செய்வானாய்
அல்லி அம் தண் அம் துழாய் முடி - பூந்தாரையுடைத்தாய் அழகிய குளிர்ந்த திருத்துழாயணிந்த திருமுடியை யுடையனான
அப்பன் - எம்பெருமானுடைய

விளக்க உரை

என்னுடைய ஆர்த்தியைத் தீர்த்தருள்பவன் ஸர்வேச்வரன், அவனூர் திருக்கடித்தானம் என்கிறார். ஐயோ! எம்பெருமானுடைய அருளை என்ன சொல்லுவேன்! பகலென்றும் இரவென்றும் பாராமல் எக்காலத்திலும் தன்னையே நினைத்து உஜ்ஜீவிக்கும்படி செய்து போருமிவ்வருளை என் சொல்லவல்லேனென்வாய் கொண்டே யென்று தணறுகிறார். என்னுடைய குற்றங்களைப் பார்த்தானாகில் அவன் அருளுகைக்கு ப்ரஸக்தியுண்டோ? நான் அகிஞ்சநன் என்று என்னுடைய வெறுமையையே பார்த்துத் தன்பேறாக அருளுமிவ்வருள் என்னோவென்கிறார். கீழே * மாயக்கூத்தன் பதிகத்திலே தாம்பட்ட வ்யஸனத்திற்காக அருள் செய்கிறானென்று நினைக்கின்றிலர், தன்பேறாக அருள் செய்வதாகவே நினைக்கிறார். உண்மையில் இப்படித்தானே நினைக்கவேண்டும். இதுவுமன்றி, இப்படிப்பட்டவருள் வேறொருவருக்குமன்றிக்கே தம்மொருவர்க்கே செய்வதாகவும் காட்டுகிறார் நமக்கே தந்தருள் செய்வான் என்று. தாம் பெற்றபேறு நித்யஸூரிகளும் பெற்றிலர் என்பதே ஆழ்வாருடைய திருவுள்ளம். கீழ்த் திருவாய்மொழியில் *மொய்பூந்தாமத் தண்டுழாய்க் கடிசேர்கண்ணிப பெருமானே! * என்று இவர் ஆசைப்பட்டபடியே காட்டிக் கொடுத்தருளினதைப் பேசுகிறார் அல்லியந்தண்ணந்துழாய் முடியப்பன் என்று. இப்படிப்பட்ட மஹோபகாரகன் எழுந்தருளியிருக்கு மிடமாகையாலே நமக்கு உத்தேச்ய ஸ்தலம் திருக்கடித்தானம் என்கிறார். செல்வர்கள் வாழும் –தனிகர்கள் வாழுமிடம் என்கிறதன்று, நிரந்தரபகவதநுபவமேயாய்க் காலங் கழிக்கையே செல்வமாம், இளையபெருமானை யொத்தவர்கள் வாழுமிடம் என்றபடி.

English Translation

The Lord wearing a wreath of Tulasi blossoms, lives with fortune-favoured ones in Tirukkodittanam, Night and day worshipped with joy, he gives us grace and all else

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்