விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒக்கும் அம்மான் உருவம்என்று*  உள்ளம் குழைந்து நாள்நாளும்* 
    தொக்க மேகப் பல்குழாங்கள்*  காணும்தோறும் தொலைவன்நான்*
    தக்க ஐவர் தமக்காய்அன்று*  ஈர்ஐம்பதின்மர் தாள்சாயப்* 
    புக்கநல்தேர்த் தனிப்பாகா!*  வாராய் இதுவோ பொருத்தமே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்மான் உருவம் ஒக்கும் என்று - எம்பெருமானுடைய வடிவழகுக்குப் பொலியாயிருக்குமென்று
உள்ளம் குழைந்து - நெஞ்சுருகி
நாள் நாளும் நான் தொலைவன் - நாடோறும் நான் கிலேசப்படுவேன்
அன்று - பாரதப்போர் நடந்த வக்காலத்தில்
தக்க ஐவர் தமக்கு ஆய் - உன்னுறவுக்குத தகுதியான பஞ்ச பாண்டவர்களுக்காக

விளக்க உரை

பிரானே! போலிகண்டு வருந்துமவனாய் நானிருக்க, ஆச்ரிதபக்ஷபாதியான நீ வந்து தோன்றுகின்றிலையே, இது உன் ஸ்வபாவத்திற்குச் சேருமோ? என்கிறார். நாமெல்லாரும் நீர் கொண்டெழுந்த நீலமேகத்தைக் கண்டால் “நன்றாக மழைபெய்யப் போகிறது, நம்முடைய நிலம் இருபோகமும் முப்போகமும் விளைப்போகிறது“ என்று இதுவே நினைவாக மகிழ்ந்திடுவோம், * உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணனென்றிருக்கிற ஆழ்வார்க்கு இந்த நினைவு உண்டாக ப்ரஸக்தியில்லையே, * பூவையுங் காயாவும் நிலமும் பூக்கின்ற காவிமலரென்றுங் காண்டோறும், பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை யெல்லாப் பிரானுவேயென்று * (பெரிய திருவந்தாதி) என்கிற பாசுரப்படியும், * மண்ணையிருந்து துழாவியென்கிற பதிகத்தின்படியும் எதையும் பகனதாத்மகமாகவே பார்க்கிறவாரைகையால் மேசங்கைளைப் பார்க்கும்போது “ஒக்கும்மமானுருவம்“ என்று நினைக்கிறாராயிற்று. அன்னலுந் துன்னலுமான மேகமெங்கே, எம்பெருமானுருவம்“ என்று நினைக்கிறாராயிற்று. அன்னலுந் துன்னலுமான மேகமெங்கே, எம்பெருமானுடைய திருவடிவமெங்கே! இது ஆழ்வார்க்குத் தெரியாத்தன்றே, ப்ரமிக்கைக்குச் சிறிது காரணம் போதுமென்றோ. (உள்ளங்குழைந்து நாணாளும் தொலைவன் நான்) தோற்புரையேயன்றியே அகவாயும் சிதிலமாய் இடைவிடாமல் கிலேகியாநிற்பேன். நான் உன்னை மறந்திருக்க வொண்ணாதபடி மேகம் உன்னை நீச்சலும் நினைப்பூட்டி மாய்க்கின்றதே! என்செய்வேன்! என்று வருந்துகிறபடி. இதற்கு என்னை என் செய்யச் சொல்லுகிறீர் என்று எம்பெருமான்னினைவாக, ஆச்ரித பாக்ஷபாதியென்று பேர்பெற்றநீ வந்தாலாகாதோ வென்கிறார். நான் ஆச்ரிதபக்ஷபாதயென்பதை நீர் அறிந்தவிதம் எங்ஙனேயென்று அவன் கேட்க, கதை சொல்லுகிறார் தக்க வைவர்தமக்கா யென்று தொடங்கி. போலிகண்டு இரங்கவறியாத பஞ்சபாண்டவர்களுக்குக் கையாளாயிருந்து நீ செய்த காரியம் ஒரு பாரதத்துக்குப் போதுமே, * ஸேநயோருபயோர் மத்யே ரதம் ஸ்தாபய * என்று, இரண்டு சேனைகளுக்கும் நடுவே தேரைக்கொண்டு நிறுத்து என்றால் அப்படியே செய்த்து முதலிய காரியங்கள் ஒன்றிரண்டோ? நூற்றுவரைத் தொலைக்க ஐவர்க்கு அத்தனை செய்தநீ என்னொருவனுக்கு வெறுமனே (ஒரு காரியமுஞ் செய்யாதே) வந்து தோன்றினாலாகாதோ வென்கிறார். (இதுவோ பொருத்தமே) அடியார்களோடு முன்புநீ பொருந்திப் போந்தபடி இதுவோ? அடியார்களுக்குத் தூது போயும் சராதியாய் நின்றும், ஆயுத மெடேனென்று ஆயுதமெடுத்தும், பகலை இரவாக்கியும் இப்படி யெல்லாஞ்செய்து ஆச்ரிதபக்ஷபாதத்தைக் காட்டினாயென்பது பொய்யோ? ரிஷிகளுக்குக் கைக்கூலி கொடுத்து எழுதுவித்துக் கொண்டதோ? என்று கேட்கிறாராயிற்று.

English Translation

Every time I see dark flocking clouds, my heart melts says "This is what my Lord looks like", and day by day I die. O Lord who drove the chariot for the godly five in war against the wicked hundred! Come now, is this fair?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்