விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'கொண்டல் வண்ணா! குடக்கூத்தா!*  வினையேன் கண்ணா! கண்ணா* என் 
    அண்டவாணா!' என்றுஎன்னை*   ஆளக் கூப்பிட்டுஅழைத்தக்கால்*
    விண்தன்மேல்தான் மண்மேல்தான்*  விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்* 
    தொண்டனேன் உன்கழல்காண*  ஒருநாள்வந்து தோன்றாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொண்டல் வண்ணாகுடக் கூத்தா - காளமேக வண்ணனே! குடக்கூத்தாடினவனெ!
வினையேன் கண்ணா - அக்குடக் கூத்தைக் கண்டனபவிக்கப்பெறாத பாவியேனுக்குக் கண்ணானவனே!
கண்ணா - ஸ்ரீ க்ருஷ்ணனே!
என் அண்டவாணா - என்னையடிமைப் படுத்திக் கொள்ளுகைக்காகப் பரமபத நிலயனானவனே!
என்று - என்றிங்ஙனே உன்படிகளைச் சொல்லி

விளக்க உரை

பிரானே! உன்னுடைய வடிவழகை நினைத்து காணவேணும் காணவேணுமென்று கூப்பிடுகிற நான் காணும்படி ஏதேனுமோரிடத்தில் நின்றும் சடக்கெனவோடிவந்து தோன்றக்கூடாதாவென்று மிகுந்த ஆர்த்திதோற்ற வருளிச் செய்கிறார். மாநீர்க்கொண்டல் வருமாகாசத்தில் நின்றும் வந்து தோற்றலாம், பரமபதத்திலிருக்கிற விருப்போடேவந்து தோற்றலாம், மண்மீது விபவாவதாரங்கள் பண்ணின திருவயோத்தி திருவடமதுரை முதலானவிடங்களிலிருந்து வந்து தோற்றலாம், * சீரார்திருவேங்கடமே திருக்கோவலூரே மதிட்கச்சியூரகமே பேரகமேயென்னும்படியான திருப்பதிகளில் நின்றும் வந்து தொற்றலாம், “தூணிலுமுளன் துரும்பிலுமுளன்“ என்னும்படி ஸர்வபதார்த்தங்களிலுள்ளும் கரந்து பரந்துளனான நீ எங்கிருந்தும் புறப்பட்டுத் தோற்றலாம், திருவுள்ள முண்டாகில் வழிதானா இல்லை? என் ஸத்தைகிடக்கைக்கு எங்கிருந்தாவது ஒரு நாளாகிலும் வந்து தோற்றவேணும் என்கிறார்.

English Translation

O My Krishna, dear-as-my-eyes, Lord of the universe, my Master! O Cloud-hued Lord, O Pot-dancer, my Lord, I am calling you, come from the sky, or come from the Earth, or from the Ocean, or from wherever else, but come you must, and show me your lotus feet!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்