விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சொல்லமாட்டேன் அடியேன்*  உன்துளங்குசோதித் திருப்பாதம்* 
    எல்லைஇல் சீர்இள நாயிறு*  இரண்டுபோல் என்உள்ளவா!*
    அல்லல் என்னும் இருள்சேர்தற்கு*  உபாயம் என்னே? ஆழிசூழ்* 
    மல்லை ஞாலம் முழுதுஉண்ட*  மாநீர்க் கொண்டல் வண்ணனே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடியேன் சொல்ல மாட்டேன் - (என்னுள்ளத்திலுள்ள வெளிச்சத்தைப் பற்றி) அடியேன் ஒன்றும் சொல்ல தெரியாதவனாயிருக்கின்றேன். (ஆனாலும் சிறிது சொல்லுகின்றேன்)
உன் துளங்கு சோதி தரு பாதம் - உன்னுடைய விளங்கும் சோதியுடைய திருவடிகளானவை
எல்லை இல் சீர் இளஞாயிறு  இரண்டு போல் - அளவிறந்த அழகையுடைய இரண்டு பாலாத்தியர்களைப் போல
என் உள்ளே வா - என்னுளத்துள்ளே யிராநின்றன.
அல்லன என்னும், இருள் சேர்தற்கு, உபாயம் என்னே - துக்கமென்று சொல்லப்பட்டுகற மறப்பென்கிற இருள் வந்து சேருவதற்கு எது வியோ அதை சொல்லுவேணும்.

விளக்க உரை

உன் துளங்குசோதித் திருத்பதாம் இளநாயினரண்டுபோல் என்னுள்ள சொல்லமாட்டேனடியேன் –ஒளிவிளங்குமுன் தீருவடிகள் அளவிறந்த வழகையுடைய பாலாதித்யர்களிருவரப்போலே என் ஹ்ருதயத்திலிநின்று நலிகறிபயை என்னவென்று சொல்லவேணும் நலிவதாத மூலத்திலில்லையே யென்னவேண்டா, சொல்லமாட்டேனடியேன்“ என்பதில் அஃது உறைந்துகிடக்கும். இளநாயிறு என்றதும் ஸாபிப்ராயம். ஸூரய்ன் உதிக்கும்போதே கண்ணைக் குத்துகிறாப்போலே உதிப்பனன்றோ. பின்னடிகளில் “அல்லலென்னுமிருள் சேர்தற்கு உபாயமென்னே“ என்பதற்குப் பலர் பொருளில் மயங்குவர்கள், இரண்டு திருவடிகள் இரண்டு ஸூரியர்கள்போலே உள்ளே பிரகாசித்துக்கொண்டிருக்க இருள் எப்படிவந்து சேரும்? வந்துசேரமாட்டாது என்பதாகப் பொருள்கொள்வது கூடாது. (அது பிரகரணத்திற்குச் சேராது) மறப்பாகிற இருள் வந்து சேருகைக்கு உபாயம் சொல்ல வேணுமென்று மறப்பை அபேக்ஷிக்கிறாராயிற்று. இருள் என்பது அஜ்ஞானத்திலே ஒருவகையாகையாலே, இருள் சேர்தற்கு உபாயமென்ன? என்றது – மறந்து பிழைப்பதற்கு வழியென்ன? என்று கேட்கிறபடி. இங்கே இருபத்தினாலாயிரப்படி ஸ்ரீஸூக்திகாண்மின், - “அநர்த்த ரூபமான விஸ்ம்ருதி தேட்டமாம் படியிறே வடிவழகு ஹ்ருதயத்திலே நின்று நலிகிறபடி. ஏதேனுமாக இவர்க்கு துக்கநிவ்ருத்தியே இப்போது வேண்டுவது, திருவடிகள் நெஞ்சிலே ப்ரகாசியாநிற்க, அஜ்ஞானம்வந்து சேருகைக்கு ப்ரஸங்கமின்றியேயிருக்க அத்தையபேக்ஷிக்கிறாரிறே.“ இங்கே ஈட்டில் பட்டருடைய நிர்வாஹமொன்றும் அம்மாளுடைய நிர்வாஹமொன்றும் அரளிச்செய்யப்படுகிறது. “உன்னைக் காட்டாதே அருமைப்படுத்தப் பார்த்தாயாகில், நாட்டார் மிகவும் நிஹீனமாகத் கொள்ளுகிற அஜ்ஞானம் வருவதோருபாயம் சொல்லாய் என்பதாக பட்டருடைய நிர்வாஹம், மறந்து பிழைக்கலாமென்கிற எண்ணத்தினால் இது கேட்பதாகக் கொள்வது. இனி அம்மாளுடைய நிர்வாஹமாவது – திருவடிகள் என் ஹ்ருதயத்திலே ப்ரகாசியாநிற்க துக்கரூபமான அஜ்ஞானம் வருகைக்கு உபாயமுண்டோ? என்று. அது உண்டானால் ஸம்ஸாரிகளைப்போலே உண்டியே உடையே உகந்தோடித்திரியலாமே யென்று.

English Translation

O Dark-cloud Lord who swallowed the round Earth and waters, I cannot describe the effulgence of your radiant feet. They are like two young suns of infinite light shining in my heart. Now how can the darkness of evil every approach me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்