விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குற்றம்இன்றிக்குணம்பெருக்கிக்*  குருக்களுக்குஅனுகூலராய்* 
  செற்றம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்த்*
  துற்றிஏழ்உலகுஉண்ட*  தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்* 
  பெற்றதாயர்வயிற்றினைப்*  பெருநோய்செய்வான்பிறந்தார்களே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குற்றம் இன்னி - ஒருவகையான குற்றமுமில்லாமல்
குணம் - (சமம், தமம் முதலிய குணங்களை)
பெருக்கி - வளரச் செய்துகொண்டு
குருக்களுக்கு - (தம்தம்) ஆசாரியர்களுக்கு
அனுகூலர் ஆய் - (கைங்கரியம் பண்ணுவதற்குப்) பாங்காயிருப்பவர்களும்

விளக்க உரை

உலகத்திற் பிறந்த பிள்ளைகள் திருக்கோட்டியூ ரெம்பெருமானை வணங்கினால்தான், அவர்களைப் பெற்ற தாய்மார்பேறு பெற்றவராவார்கள்; அல்லாவிடில், இப்பிள்ளைகளால் அந்தத் தாய்மார்கட்கு ஒருவகைப் பயனுமில்லாமல், பிரஸவகாலத்திற்பட்ட வேதனையே மிகுந்ததாமென்றவாறு.

English Translation

The Lord who swallows the seven worlds in a trice resides in Tirukkottiyur with people who are free from blame, who cultivate good qualities, with malice towards none, who always emulate their preceptors and remain generous at heart. They who do not offer worship of the gem-hued Lord do surely cause immense pain to the wombs of their mothers by their birth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்