விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'காணவாராய்' என்றுஎன்று*   கண்ணும்வாயும் துவர்ந்து*  அடியேன் 
    நாணி நல்நாட்டு அலமந்தால்*  இரங்கி ஒருநாள் நீஅந்தோ*
    காணவாராய்! கருநாயிறுஉதிக்கும்*  கருமாமாணிக்க* 
    நாள்நல்மலைபோல் சுடர்ச்சோதி*  முடிசேர் சென்னி அம்மானே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரு நாயிறு உதிக்கும் - கறுதத்தொரு ஸூர்யன் உதித்துக்கிளம்பியிருப்பதாய்
மா கரு மாணிக்கம் - மஹத்தான நீல ரத்னமாய்
நாள் நல் மலை போல் - அப்போதுண்டான அழகிய மலை போலே
சுடர் சோதி - பரம்புகிற சுடரையுடைத்தான தேஜஸ்ஸையுடைய
முடி சேர் - மயிர் முடியோடே சேர்ந்த

விளக்க உரை

என் விடாய் கெடும்படி அழகிய மயிர் முடியுடனே வந்து தோற்றியருள வேணு மென்கிறார். கீழ்பாட்டில் “காணவாராய்“ என்று ஒரு காலே சொல்லியிருந்தாலும் பலகால் வாயாரக் கூப்பிட்டிருப்பரே, பாட்டிலே சொல்லுகிறவளவேயோ உள்ளது? ஆழ்வாருடைய கூக்குரல்களெல்லாம் பாட்டிலே யடங்குமோ? இப்பாட்டில் “காணவாராய் காணவாராயென்று சொல்லியும் நீ வரக் காணாமையாலே ஆறியிருக்கமாட்டாமல் பின்னையும் “காணவாராய், காணவாராய்“ என்றேன், (கண்ணும்வாயும் துவர்ந்து) எந்த வழியாக வருகிறாயோவென்று திசைகள் தோறும் பார்த்துக் கண்களும் பசையறவுலர்ந்தன, கண்ண நீர்க்கைகளாலிறைக்கும் * என்னும்படியான நிலைமையும் போயிற்று, கூவிக்கூவி வாயும் பசையற வலர்ந்தது. (அடியேன் நாணி) உடனே எனக்கு லஜ்ஜையுமுண்டாயிற்று. எதற்காக வென்னில், இரண்டு விதத்தாலே லஜ்ஜையாகக்கூடும், ஒரு க்ஷுத்ரபலனுக்காகவல்லாமல் காண்கைக்காகவே முறையறிந்து நாம் கூப்பிடச் செய்தேயும் நமக்குவந்து தோன்றவில்லையேயென்று உண்டான லஜ்ஜையொன்று, “ஆழ்வார் இப்படி கூப்பிடாநிற்கச் செய்தேயும் வந்து தோன்றாமலிக்கிறானே, இப்படியும் ஒரு நிர்க்ருணனுண்டோ, என்று நாட்டார் உன்மேல் வழிசொல்லக்கூடுமே, நம்மாலன்றோ இந்த அவத்யம் அவனுக்குண்டாகிறது“ என்றுண்டான லஜ்ஜை மற்றொன்று. (நன்னாட்டு அலமந்தால்) * இருள் தருமாஞாலமென்று வெறுத்து இகழப்படுகின்ற இந்த நாட்டை நல்ல நாடென்றதற்கு இரண்டு வகையாகக் கருத்து கூறுவர், எதிர்மறையிலக்கணையினால் தீய நாடு என்றதாகவே கொள்ளலாம், அன்றியே, ஆழ்வார் தம்மைப்போலே இந்நாட்டினர் இப்படி அலமந்து கூப்பிடக் காணாமையாலே இந்நாட்டு எம்பெருமானைப்பெற்று அநுபவிக்கின்றதென்றே கொண்டு நல்லநாடென்றதாகவுங் கொள்ளலாம். பின்னடிகளால் விலக்ஷணமான உத்ப்ரேக்ஷை பண்ணுகிறார், கருநிறத்தனான ஸூர்யன் அப்ரஸித்தன், கரியமாணிக்கமும் அப்ரஸித்தம், இற்பொருளுவமை முறையில் அப்படிப்பட்ட இரண்டு வஸ்துக்களைக் கற்பனை செய்து கொள்ளுகிறார், கரியஸூர்யன் உதிக்கப்பெற்ற கரியமாணிக்கமலைபோலே யென்கிறார். மிக்க புகரையுடைய மயிர்முடிக்குக் கரியஸூர்யன் உவமை, கரிய திருமேனிக்குக் கரியமாணிக்கம் உவமை.

English Translation

With faltering steps I roam the good Earth in shame, I call and look everywhere, with parched lips and dried tears. Alas, will you not come one day, showing your dark frame and glistering hair like a new mountain with a black Sun rising over its peaks?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்