விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட*  அத்திருவடி என்றும்* 
    திருச்செய்ய கமலக்கண்ணும்*  செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*
    திருச்செய்யகமல உந்தியும்*  செய்யகமலை மார்பும் செய்யஉடையும்* 
    திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்*   திகழ என் சிந்தையுளானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செய்ய கமலம் திருக்கண்ணும் - செந்தாமரை போன்ற திருக்கண்ணும்
செம் வாயும் - சிவந்த திருப்பவளமும்
செம் அடியும் - சிவந்த திருவடிகளும்
செய்ய கைவும் - சிவந்த திருக்கைகளும்
செய்ய கமலம் திரு உந்தியும் - சிவந்த கமலத்தையுடைத்தான திருநாபியும்

விளக்க உரை

திருச்சிற்றாற்றெம்பெருமானுடைய வடிவழகை வாயரப் பேசுகிறாரிதில் அழகு பொருந்திச் சிவந்தவையாய், விகாஸம் செவ்வி முதலானவற்றால் தாமரையையொத்திருப்பவையான திருக்கண்களும், அத்திருக்கண்ணோக்காலே பிறந்தவுறவை ஸ்வாபித்துக் கொள்ளும் புன்முறுவல் பொலிந்த திருப்பவளமும், அந்தப் புன்முறுவலுக்குத் தோற்றவர்கள் விழுந்து வணங்கத் தக்க திருவடிகளும், திருவடிகளில் விழுந்தவர்களை யெடுத்தணைக்கும் திருக்கைகளும், அப்படி அணைக்கப்பெற்றவர்களும் நித்யமும் அநுபவிக்கத் தக்கதாய் அழகுக் கெல்லையாய் ஸர்வோத்பத்திஸ்தானமென்று தோற்றும்படியிருக்கிற திருநாபியும், பகவத்ஸம் பந்தமில்லாதவர்களுக்கும் பற்றாசான பிராட்டிக்கு இருப்பிடமாய்க் கொண்டு சிவந்திருக்கின்ற திருமார்வும், திருமேனிக்குப் பரபாகமான திருப்பீதாம்பரமும், அச்சம் தீரும்படி ரக்ஷகத்வ ஸூசகமாயிருந்துள்ள திருவபிஷேகமும் திவ்யாயுதங்களும் விளங்க என்றும் என்சிந்தையிலே வர்த்திக்கையாலே அச்சம் தலைகாட்ட வழியில்லை யென்றாராயிற்று.

English Translation

I see the lustrous Lord standing in Tirucchengunur with lotus eyes, lotus feet, lotus hands, lotus navel, and lotus chest, coral lips and red garments, and an auspicious red crown; his radiant form with ornaments and five weapons fills my heart

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்