விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாவகாரியம்சொல்இலாதவர்*  நாள்தொறும்விருந்துஓம்புவார்* 
    தேவகாரியம்செய்து*  வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*
    மூவர்காரியமும்திருத்தும்*  முதல்வனைச்சிந்தியாத*  அப்- 
    பாவகாரிகளைப்படைத்தவன்*  எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பயின்று - ஓதிக்கொண்டும்
வாழ் - வாழுமிடாமன
திருக்கோட்டியூர் - தீருக்கோட்டியூரில் எழுந்தருளியிருப்பவனும்,)
மூவர் - பிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய
காரியமும் - காரியங்களையும்

விளக்க உரை

பொய் பேசுகை, பிறரை புகழுகை முதலிய துஷ்கர்மங்களில் அந்வயமற்றவரும், உள்ளூர் ஸ்ரீவைஷ்ணவர்களையும் அதிதிகளைப்போல் ஆதரிப்பவரும், பகவதாராதநம, வேதாத்யயநம் முதலிய ஸத்கர்மங்கள் செய்துகொண்டு போது போக்குமவர்களுமான பரமபாகவதர்கள் வாழுமிடமாகிய திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாவியாத பாவிகளைப் பிரமன் படைத்தது என்ன பயனைக் கருதியோ? அறியோம் என்கிறார். வேர் + காரியம், தேவகாரியம்; திருவிளக்கெரிக்கை, திருமாலை யெடுக்கை முதலியனகொள்க. மூவர் காரயிமாவது- மதுகைடபர்கள் கையில் பறிகொடுத்த வேதத்தை மீட்டுக் கொடுத்தருளியது, பிரமனுக்குச் செய்த காரிணம்; குருவும் பிதாவுமான பிரம்மனுடைய தலையைக் கிள்ளினமையால் வந்த பாபத்தைப் பிச்சையிட்டு, போக்கியருளியது, ருத்ரனுக்குச் செய்த காரியம்; மஹாபலி போல்வார் கையிற் பறிகொடுத்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தருளியது, இந்திரனுக்குச் செய்த காரியம். திருத்துகை- ஒழுங்குபடச் செய்கை.

English Translation

The Lord who makes the three agents Brahma, Rudra and Indra perform their roles, resides in Tirukkottiyur where they speak no untruth, every day receive guests with honor, perform dedicated temple service and pursue Vedic studies all their lives. Wonder how the Creator ever created wicked ones, they who never think of the first-cause Lord even once!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்