விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எம் தொண்டை வாய்ச் சிங்கம்*  வா என்று எடுத்துக்கொண்டு* 
    அந் தொண்டை வாய்*  அமுது ஆதரித்து*  ஆய்ச்சியர்
    தம் தொண்டை வாயால்*  தருக்கிப் பருகும்*  இச் 
    செந் தொண்டை வாய் வந்து காணீரே* 
    சேயிழையீர்! வந்து காணீரே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆய்ச்சியர் - இடைப்பெண்கள்;
தொண்டை - ‘‘கொவ்வைக்கனி போன்ற;
வாய் - அதரத்தையுடைய;
எம் சிங்கம் - எமது சிங்கக்குருவே!;
வா என்று - (எம்பக்கல்) வா’’ என்று;

விளக்க உரை

உரை:1

'கொவ்வைப் பழம் போன்ற சிவந்த உதடுகளை உடைய எங்கள் சிங்கக்குட்டியே' என்று அன்புடன் கூவி இந்தக் கண்ணக்குமரனை ஒக்கலையில் (இடுப்பில்) எடுத்துக் கொண்டு அந்த அழகிய கொவ்வைக்கனி அதரங்களில் ஊறும் அமுதத்தை விரும்பித் தமது கொவ்வைக்கனி அதரங்களில் ஏந்தி மிகப்பெருமையுடன் பருகுகின்றனர் ஆய்ச்சியர்கள். அப்படிப்பட்ட சிவந்த கொவ்வைக் கனிவாய் அதரங்களைக் காண வாருங்கள். சிவந்த அணிகலன்களை அணிந்த பெண்களே வாருங்கள்.

உரை:2

வாயினழகைக் காட்டுகின்றாள். இடைச்சிகள் ஒவ்வொருத்தியும் ‘என் சிங்கக்குட்டியே! என் யானைக்குட்டியே!’ என்று பலபடியாகச் சீராட்டி ஸ்ரீகிருஷ்ணகுமாரனை யெடுத்துக் கொண்டு அவனது வாயில் ஊறுகின்ற அமுதம்போல் போக்யமான நீரைப் பானம் பண்ணுவார்களாம். அப்படி அவர்களால் பானம் பண்ணப்பெற்ற அதரத்தினழகை வந்து பாருங்களென்கை.

English Translation

O ladies wearing gem-set jewels, come here and see! Amorous cowherd girls lift this child saying, ”Come my lion-cub!”, press him against their coral lips, and drink the sap that oozes from his red berry lips.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்