விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்*   நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த* 
    குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த*   கோலமாணிக்கம் என்அம்மான்*
    செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்*  திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு 
    அறிய*  மெய்ம்மையே நின்ற எம்பெருமான்*   அடிஇணை அல்லதுஓர் அரணே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெரிய மூ உலகும் நிறைய - இடமுடைத்தான மூவுலகும் நிறையும்படியாக
பேர் உருவம் ஆய் நிமிர்ந்த - பெரிய வடிவையுடையனாய்க் கொண்டு வளர்ந்த
குறிய மாண் எம்மான் - வாமனப் பிரமசாரியான என் ஸ்வாமியாய்
குரை கடல் கடைந்த - கோஷிக்கின்ற கடலைக் கடைந்தவனாய்
கோலம் மாணிக்கம் என் அம்மான் - அழகிய ரத்னம் போன்ற திருவடிவை எனக்குக் காட்டித்தந்தருளின உபகாரகனாய்.

விளக்க உரை

மஹாபலியின் வலியை யடக்கியும் கடல் கடைதலாகிற அரிய பெரிய காரியத்தைச் செய்தும் அடியார்களது துன்பங்களைத் தொலைத்துத் திருச்சிற்றாற்றுப்பதியிலே நின்றருளினவனது திருவடிகளல்லது வேறெனக்கு அரணில்லை யென்கிறார். பெரிய மூவுலகும் நிறையப் பேரூரூவமாய் நிமிர்ந்த – மூவுலகின் பெருமைக்குத் தக்கபடி தன்னுருவத்திலும் பெருமை கொண்டானென்க. திருவுருவம் பெருமை கொண்டது மூவுலகங்களையும் ஆக்ரமிக்கைக்காகவேயன்று, அகடிதகடநாஸமர்த்தனான அவன் சிறிய திருவுருவத்தாலும் மூவுலகையும் ஆக்ரமிக்க முடியாமையில்லையே, பின்னை எதற்காகப் பேருருவமான தென்னில், தொடங்கின கார்யம்வென்ற ப்ரீதிப்கர்ஷத்தாலே வளர்ந்தபடி“ என்பர் நம்பிள்ளை. உலகில் ஒருவனுக்கு அபீஷ்டம் நிறைவேறப் பெற்றால் உடல் பூரிக்குமன்றோ, அப்படி இங்கும் தன் பக்கலிலே பல்லைக்காட்டிப் பரிதாபம் தோன்ற நின்ற இந்திரனுக்குக் காரியம் செய்யப் புகுந்து அது நிறைவேறப் பெறுகையாலே உடல் பூரித்தாயிற்று. குறியமாண் எம்மான் –“கொண்டகோலக் குறளுருவாய்“ ஐயோ! இப்படி பரம ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டா கடலைக் கடைவது, தேவருமசுர்ருமான முரட்டான்கள் பலகோடி நூறாயிரவர் இல்லையோ? அவர்கள் * நெருங்க நீ கடைந்தபோது நின்ற சூர்ரென் செய்தார்? * என்னும்படியாகச் சோர்ந்து துவண்டுநின்றால் நீ கடையவேணுமென்று என்ன தலைவிதியோ? கோலமாணிக்க மென்னும்படியான திருமேனியின் ஸௌகுமார்யத்தைச் சிறிதும் பராதே இப்படியும் ஒரு அதிப்வருத்தியுண்டோ? என்று நெஞ்சிளகிச் சொல்லுகிறபடி. இப்படிப்பட்ட. வெம்பெருமான் பரம போக்யமான திருச்சிற்றாற்றிலே யுள்ளாரடங்களும் இவன் ஸர்வேச்வரனென்ற்றியும்படியாக, தன்னுடைய பெருமையை மறைத்துக் கொள்ளாதே நிஜஸ்வரூபத்தோடே நின்றருளினான், அவனது திருவடியிணையல்லது எனக்கு வேறொரு ரக்ஷகமில்லை.

English Translation

Then he came as Vamana, his frame grew and covered the Earth. My beautiful gem-hued Lord then also churned the ocean, in Tirucchengunur, where plantain, Areca and coconut trees line the sky, he appears in true form, standing his feet are my refuge

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்