விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்அமர்பெருமான் இமையவர்பெருமான்*   இருநிலம் இடந்த எம்பெருமான்* 
    முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள*   என்னைஆள்கின்ற எம்பெருமான்*
    தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாற்றங்கரைமீபால்- 
    நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண்   நினைப்பிலும்*  பிறிதுஇல்லை எனக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தென் திசைக்கு அணி கொள் - தென் திசைக்கு அலங்காரமாகக் கொள்ளப்படுவதான
திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்ங்கரை மீபால் நின்ற - திருச்சிற்றாறென்னும் திருப்பதியின் மேலேப்பக்கதில்லெழுந்தருளி யிருப்பவனான
எம்பெருமான் - அஸ்மத்ஸ்வாமியினுடைய
அடி அல்லால் - திருவடிகளைத் தவிர்த்து
எனக்கு நினைப்பிலும் பிறிது சரண் இல்லை - என்னுடைய மனோரது தசையிலும் வேறொரு புகல் இல்லை.

விளக்க உரை

“என்னமர் பெருமானிமையவர் பெருமா“ வென்ற விதனை “இமையவர் பெருமான் என்னமர் பெருமான்“ என மாற்றியந்வயிப்பது. * அயர்வது ம்மார்களதி பதியாயிருக்குமவன் எனக்கு அமர்ந்த ஸ்வாமியாயுள்ளான். அந்த பரத்வமெஙகே, இந்த ஸௌலப்ய மெங்கே! என்று வியப்புத் தோற்ற வருளிச் செய்கிறபடி இரு நிலமிடந்த எம்பெருமான் – பிரளயாபத்தைப் போக்கின தன் வல்லமையைக் காட்டி என்னை ஆட்படுத்திக் கொண்டவனென்றபடி. முன்னைவல்வினைகள் முழுதுடன்மாள என்னையாள்கின்ற வெம்பெருமான் – கீழே தமக்குப் பிறந்த அச்சத்தைப் போக்கினபடியைச் சொல்லுவது இங்கு விவக்ஷிதம். நான் காமடியில் “சரண்நிலைப்பிலும்“ “சரணம் நினைப்பிலும்“ என்பன பாட பேதங்கள். “சரணம்“ என்று பாடமாம்போது “அடியல்லால்“ என்பது “அடியலால்“ என்று தொகுதுதலாகக் கொள்க.

English Translation

My eternal Lord came and measured the Earth and sky. He rules over me, destroying my past karmas by the root. He stands in Tirucchengunrur, jewel of the South, on Tirucchitraru. I cannot think of a refuge other than his lotus feet

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்