விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலக்கம் இல்லா*  நல்தவமுனிவர் கரைகண்டோர்* 
    துளக்கம் இல்லா*  வானவர் எல்லாம் தொழுவார்கள்*
    மலக்கம் எய்த*  மாகடல்தன்னைக் கடைந்தானை* 
    உலக்க நாம் புகழ்கிற்பது*  என்செய்வது உரையீரே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துளக்கம் இல்லா வானவர் - ஒருகாலும் ஸ்வரூப விபர்ய யமடையாதவர்களான நிர்யஸூரிகளென்ன,
எல்லாம் - ஆகய இவர்களெல்லாரும்
தொழுவார்கள் - பரிவுபூண்டு மங்களாசாஸனம் பண்ணுமவர்களாயிராநின்றார்கள்,
மா கடல் தன்னை - பெருங்கடலை
மலக்கம் எய்த கடைந்தானை - கலங்கும்படி கடைந்த பெருமானை

விளக்க உரை

ஆழ்வாருடைய அச்சத்தைப் பரிஹரிக்கைக்காக எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “நமக்கு ஸநகாதிகள் முக்தர்கள் நித்யஸூரிகள் ஆகிய விவர்கள் கிட்டிநின்று பரிகிறார்கள், அதுதவிர, நாமும் அரிய செயல்களும் செய்யவல்லோமான பின்பு நீர் நமக்கு அஞ்சும் வேண்டா காணும்“ என்றருளிச் செய்ய, ஆழ்வார் அச்சந்தீர்ந்து அத்தை யநுஸந்தித்து இனியாராகிறார். இவ்விஷயம் ஆழ்வார்க்கு முன்பே தெரியாதோ? இப்போதுதான் தெரியுமோ? என்று சிலர் கேட்கக் கூடுமென்று கொண்டு இங்கே நம்பிள்ளையருளிச் செய்கிறார் – “இவர் தமக்கு இன்னபோது இன்னது பயஹேதுலாம், இன்னபோது இன்னது பரிஹாரமாம் என்று தெரியாதிறே“ என்று. கலக்கமில்லா நல்தவமுனிவர் –மஹாதபஸ்விகளான ஸநகாதிகள். கரைகண்டோர் – ஸம்ஸார நிலத்தைக்கடந்து மோக்ஷ பூமியைக் கண்டவர்களான முக்தர்கள். துளக்க மில்லாவானவர் – ஒருகாலும் ஸம்ஸாரஸ்பர்சமே யில்லாதவர்களான நித்யஸூரிகள், ஆகிய இவர்கள் ளெல்லாரும் மங்களாசாஸன பரர்களாயிருக்கின்றார்க ளென்று எம்பெருமானுணர்த்தியதை அநுவாதம் பண்ணினபடி முன்னடிகள். இரண்டாமடியின் முடிவில் தொழுவார்களென்றது மங்களா – சாஸனம் பண்ணுவர்களென்ற பொருளில் பிரயோகிக்கப்பட்டது. இப்படி மங்களா சாஸனபரர் குறையற்றிருக்கும்போது நமக்கென்ன பணியென்று தலைக்கட்டுகிறார் பின்னடிகளால்.

English Translation

The clear-sighted austere Munis can only see the shore. The great eternal celestials only stand and worship. How can we ever fully praise the Lord who churned the deep ocean, pray fell me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்