விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருமால் நான்முகன்*  செஞ்சடையான் என்றுஇவர்கள்*  எம் 
    பெருமான் தன்மையை*  யார் அறிகிற்பார்? பேசிஎன்*
    ஒருமாமுதல்வா!*  ஊழிப்பிரான் என்னை ஆளுடைக்* 
    கருமாமேனியன்! என்பன்*  என்காதல் கலக்கவே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறிகீற்பார் - அறியவல்லார்?
பேசி என் - இது சொல்லி என்ன ப்ரயோஜனமுண்டு?
ஒரு மா முதல்வா - விலகணான பரமகாரணமானவனே!
ஊழி பிரான் - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் ஸ்வாமியானவனே!
என் காதல் கலக்க - என்னுடைய ப்ரேமமானது நெஞ்சைக்கலக்க

விளக்க உரை

ஆழ்வீர்! நமக்குப் பரியப் பிரமன்முதலான தேவர்களுண்டாயிருக்க நீர் இப்படி அஞ்சுவானேன்? என்று எம்பெருமான் கேட்க, அவர்கள் உன்னுடைய ஸௌகுமார்ய மறியப் பிறந்தவர்களோ வென்கிறார். முதலடி “திருமால் நான்முகன் செஞ்சடையானென்றிவர்கள்“ என்றிருக்கையாலே “திருமாலென்ன, நான்முகனென்ன, செஞ்சடையானென்ன ஆகிய இவர்கள்“ என்று இங்ஙனம் விபரீதமான பொருளே நெஞ்சில்பட்டுவிடும், இப்படியன்று பொருள். திருமால் என்றது விளி, திருமாலே! என்றபடி. நீயும் பிராட்டியுமான சேர்த்திக்கு மங்களாசாஸனம் பண்ணுவர்களோ அவர்கள்! என்பது உட்கருத்து. நான்முகன் ஸ்ருஷ்டிக்கு உறுப்பான பல முகங்களை யுடையனாய் அதிலே போதுபோக்கித்திரியா நின்றான். செஞ்சடையான் ஸாதகவேஷத் தோற்றச் சடைபுனைந்து தன் அபிமதலாபத்திலே கண்வைத்துக் கிடவாநின்றான், ஆக இவர்களும் இவர்களது வகுப்பிலே சேர்ந்த மற்றுள்ளவர்களும் எம்பெருமானான வுன்னுடைய ஸௌகுமார்யத்தை யறிய வல்லவர்களோ? இதைப்பற்றிச் சொல்லி என்னபயன்? அவர்கள் நம்மை யறியமாட்டார்களாகில் அறிந்த நீர் பேசிக் காணீரென்று எம்பெருமான் ஆழ்வாரை நோக்கிக்கூற, என்னால்தான் பேசலாயிருந்த்தோ வென்கிறார் பின்னடிகளில், நான் பேசக்கூடியதும் “ஒருமாமுதல்வனே! ஊழிப்பிரானே! என்னையாளுடைக் கருமேனியானே!“ என்று இவ்வளவே யன்றோ, உன் ஸௌகுமார்யமறிந்து பேசவல்ல தன்மை என்திறத்தில் தானுண்டோ? என்கிறார். இங்கே ஈடு, (என் காதல் கலக்கவே) என்னுடைய ப்ரேமமானது நான் அஞ்சும்படி கலங்கப்பண்ண, உன்வடிவழகிலும் மேன்மையிலும் கலங்கிச் சொன்ன வத்தனை போக்கி உன் ஸௌகுமார்யத்தை எல்லைக்கண்டு சொன்னேனல்லேன், ப்ரேமாந்தனாய்க் கொண்டு சொன்னேனத்தனைபோக்கி நெஞ்சொழிந்து சொன்னேனல்லேன், ப்ரயோஜநாந்தரபரரான ப்ரஹ்மாதிகள் பரிவும் உனக்கு ஸத்ருசமன்று, ப்ரேமாந்தருனான என்பரிவும் உனக்கு ஸத்ருசமன்று என்றதாயிற்று.

English Translation

my love overflowing, I call out; "O First-Lord, Time, my gem-hued Master, my Tirumal", who can comprehend my Lord's glory? Not even Brahma, Siva and the gods, now what use talking?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்