விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வருவார் செல்வார்*  வண்பரிசாரத்து இருந்த*  என் 
    திருவாழ்மார்வற்கு*  என்திறம் சொல்லார் செய்வதுஎன்*
    உருவார் சக்கரம்*  சங்குசுமந்து இங்குஉம்மோடு* 
    ஒருபாடுஉழல்வான்*  ஓர்அடியானும் உளன்என்றே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வருவார் செல்வார் - அந்தப்பக்கத்தில் நின்றும் வருபவர்களும் இந்தப்பக்கத்தில் நின்றும் போமவர்களுமான மனிசர்கள்
வண் பரிபாசுரத்து இருந்த - திருவண்பரிசாரத்திலெழுந்தருளிருக்கிற.
என் திருவாழ் மார்வர்க்கு - என்னுடைய திருமாலுக்கு
உரு ஆர்சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று - வடிவழகார்ந்த திருவாழி திருச்சங்குகளைச் சுமந்து கொண்டு இங்கு உம்மோடு ஒரு பக்கத்திலிருந்து கொண்டு திரியுமடியானொருவனிருக்கின்றானென்று.
என் திறம் சொல்லார் - என்னைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுகின்றிலர்
செய்வது என் - (இதற்கு) நான் செய்யக் கூடியது என்னோ?

விளக்க உரை

இங்கே வந்து திருவண்பரிசாரத்திலே யெழுந்தருளியிருக்க, அந்தோ! நான் உதவப்பெற்றிலேனே, இது கிடக்க, இங்ஙனே ஓரடியானுள னென்று அவனுக்கு அறவிப்பாருமில்லையேயென்று துடிக்கிறார். வருவார் செல்வார் – ஆழ்வார் திருப்புளியடியிலே யெழுந்தருளி யிருந்தன்றோ இப்பாசுரமருளிச் செய்கிறார், திருநகரத் திருவீதியிலே போவாரும் வருவாருமான வழிப்போக்கர்களுண்டே, அவர்கள் ஸம்ஸாரிகளாய்த் தங்கள் காரியங்களுக்காகப் போவதும் வருவருமா யிருந்தாலும் ஆழ்வாருடைய நினைவு அப்படியன்று, திருவண்பரிசாரம் ஸேவிக்கப்போகிறார்கள், திருவண்பரிசாரம் ஸேவித்து மீளுகிறார்கள் என்றே இவர் நினைத்திருப்பது, இங்கே ஆறாயிரப்படி – “ஸ்வகார்யார்த்தமாகப் போகிறோம் வருகிறாரும் திருப்பாரிசாரத்தேறப்போகிறாராகவும் வருகிறாராகவும் நிச்சயித்து“ என்று. இனிஈட்டு ஸ்ரீஸூக்தி, -ஸ்வகார்யத்தாலே த்வரித்துப் போவாரை தம் தசையை யறிவிக்கப் போகிறார்களென்றும், அங்கு நின்றும் வருவாரை தம்மையழைக்க வருகிறார்களென்றுமிருப்பர்.“ தம்மை யழைக்க வருகிறார்களென்று இவர் நினைத்திருந்தபடி ஒருவரும் தம்மருகே வரக்காணாமையாலே இவர்கள் திருப்பரிசாரத் தெம்பெருமா னிடத்திலே நம்மைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை போலும், அதனால்தான் அப்பெருமான் நியமிக்கவில்லை போலும் என்று அறுதியிட்டு “திருவாழ்மார்பர்க்கு என்திறம் சொல்லார் செய்வதென்?“ என்கிறார். என்னவென்று சொல்ல விருப்பமென்னில், பின்னடிகள் முழுவதும் அந்தச் சொல்லின் அநுவாதம். “பரிவர் ஒருவருமில்லாதிருக்கிற இந்த ஸம்ஸார மண்டலத்திலே சங்குசக்கரங்களைச் சுமந்து கொண்டு உம்மோடே ஒரு பக்கத்திலே கூடவே திரியுமடியா னொருவன் திருநகரியிலே திருப்புளியடியிலேயுளன்“ என்று சொல்லவேணுமாம். ஒருபாடுழல்வானென்கிறாரே, ஒருபக்கத்திற்கு ஆழ்வாரானால் மற்றொரு பக்கத்திற்கு ஆர்? என்று கேள்வி பிறக்குமே. இதற்கு நம்பிள்ளையருளிச் செய்கிறார் – “ஒரு பார்ச்வத்துக்கு இளைய பெருமாளுண்டிறே“ என்று. ஓரடியா வென்றது – அநந்ய ப்ரயோ ஜநனான தாஸன் என்றபடி. * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப என்றெண்ணி யிருக்கிற எம்பெருமான் பக்கலிலே சென்று, இப்படிப்பட்ட மஹாத்மா துந்லப ரல்லர், ஸுலபரேயாயினர், திருப்புளியடியிலேயுளர் என்று சொல்லவேணுமாம்.

English Translation

The Lord resides in Parisaram with Lakshmi on his chest. Pilgrims come and go but alas, none to say to him, "A devotee waits there longing for; morsel and slept like a child, floating on chance to go out with you bearing your conch and discus"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்