விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆளும் ஆளார் ஆழியும்*  சங்கும் சுமப்பார்தாம்* 
    வாளும் வில்லும் கொண்டு*  பின் செல்வார் மற்றுஇல்லை*
    தாளும் தோளும்*  கைகளைஆரத் தொழக்காணேன்* 
    நாளும் நாளும் நாடுவன்*  அடியேன் ஞாலத்தே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆளும் ஆளார் - (கைங்கர்யத்திற்காக) ஒரு ஆளையும் வைத்துக்கொள்ளுகிறாரில்லை.
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் - திருவாழி திருச்சங்குகளைச் சுமப்பவர் தாமேயாயிருக்கிறாரே
வாளும் வில்லும் கொண்டு - நந்தக்வாளையும் சார்கவில்லையுங் கொண்டு
பின் செல்வார் மற்று இல்லை - பின் செல்லுகைக்கு ஒருவருமில்லையே,
தாளும் தோளும் - திருவடிகளிலும் திருத்தோள்களிலு மீடுபட்டு

விளக்க உரை

திருவாழி திருச்சங்குகள் எம்பெருமானுக்கு நிருபகங்களாகையாலே அவற்றை அவனே சுமந்தாக வேண்டுமேயல்லது பிறர் சுமக்கக்கூடுமோ? என்று சில பரவை காந்திகள் சொல்லுவதாகக் கொண்டு, அதைவிட்டு, வாளும் வில்லுங்கொண்டு பின் செல்வார் மற்றில்லை என்று வேறொன்றிலே தோள்மாறுகிறார். ராமாவதாரத்திலே இளைய பெருமாள் * ப்ருஷ்டதஸ் து தநுஷ்பாணிர் லக்ஷ்மணோநுஜகாம ஹ * என்னும்படியாக வாளும் வில்லுங்கொண்டு பின் தொடர்ந்து திரிந்தாரே, அப்படியொருவரைப் பின்னேகொண்டு செல்லலாகாதோ வென்கிறார். தாளுந் தோளும் கைகளையாரத் தொழக்காணேன் – பெருமாள் நடக்கும்போது மாறியிடுந் திருவடிகளும் வீசுகின்ற திருத்தோள்களும் காப்பிட வேண்டும்படி யிருக்குமே, அந்தோ, அவற்றுக்கும் மங்களா சாஸனம் செய்வாரில்லையே! என்கிறார். கைகளையார என்றது – கைகளார என்றபடி, ஐகாரம் – சாரியை. தொழக் காணேன் – இன்னார் தொழ என்பது வியக்தமாக இல்லாமையாலே, பிறர் தொழக் காணேன் – இன்னார் தொழ என்பது வியக்தமாக இல்லாமையாலே, பிறர் தொழக் காணேன், நான் தொழும்படி காணேன் என்று இரண்டு வகையாகவும் கொள்ளலாம். ஆறாயிரப்படியில் – “தானெழுந்தருளும் போது அவன் திருவடிகளையும் திருத்தோள்களையும் என்னுடைய கைகளினுடைய விடாய் தீரும்படி தொழக் காணப்பெறுகிறலேன்“ என்று காண்கையாலே, திருவடிகளையும் திருத்தோள்களையும் ஆழ்வார் தாம் தொழப் பெறாமே வருந்தியருளிச் செய்வதாகத் தெரிகிறது. திருவடிகளுக்கும் திருத்தோள்களும் பரிகின்றவர்களைக் காணேன் என்கிற பொருளும் பொருந்தும். ஆக, கீழ் மூன்றடிகளாலும் பரிவர் இல்லாமைக்கு வருந்தி, இனி ஈற்றடியினால் தம்முடைய பரிவின் மிகுதியைக் காட்டுகின்றார். நாளும்நாளும் காடுவனடியேன் ஞாலத்தே என்று (ஞாலத்தே) இங்கே ஈடு இன்சுவை மிக்கது, “பரமபதத்திலேயிருந்து அஸ்தாநே பயசங்கை பண்ணுகிறானோ? ப்ரஹ்மாஸ்ர்த ப்ரயோகம் பண்ணுவார் நாகபாசத்தை யிட்டுக்கட்டுவார், அழைத்து வைத்து மல்லரையிட்டு வஞ்சிக்கத் தேடுவார், பொய்யாஸன மிடுவாராகிற தேசத்திலே வர்த்திய நின்றால் நான் அஞ்சாதே செய்வதென்?

English Translation

Alas, nobody comes here bearing his conch and discus, nobody comes following him with his dagger and bow, I look out for him everyday to serve and worship him, on this Earth, but do not see him, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்