விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சரணமாகிய*  நான்மறை நூல்களும் சாராதே* 
    மரணம் தோற்றம்*  வான்பிணி மூப்புஎன்றுஇவை மாய்த்தோம்*
    கரணப்பல்படை*  பற்றறஓடும் கனல்ஆழி* 
    அரணத்திண் படைஏந்திய*  ஈசற்கு ஆளாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சரணம் ஆகிய நால்மறை நூல்களும் சாராதே - ஐச்வர்யத்திற்குரிய உபாயங்களை விதிக்கின்ற நால்வேதங்களாகிற சாஸ்த்ரங்களை விட்டிட்டு
கரணம் பல் படை பற்று அறு ஓடும் கனம் ஆழி - உபகரணங்களையுடைய், பல சத்ருஸேனைகள் நிச்சேஷமாக வோடும்படி ஜ்வலிக்கின்ற திருவாழியாகிற
அரணம் திண்படை ஏந்திய ஈசற்கு ஆள் ஆயே - க்ஷேமங்கரமான திவ்யாயுதத்தைத் தரித்துள்ள எம்பெருமானுக்கு சேஷபூதர்களாயிருந்து வைத்தே (முபுக்ஷுக்களாகியு மென்றபடி)
மரணம் தோற்றம்வான் பிணிமூப்பு என்ற இவைமாய்த்தோம் - இறப்பும் பிறப்பும் மஹாவியாதிகளும் கீழ்த்தனமுமான விவற்றைப் போக்கிக்கொண்ட வித்தனையொழிய வேறில்லையே.

விளக்க உரை

“கைவல்யார்த்திகளும் தமக்குத் துணையல்லரென்கிறார்“ என்பது இப்பாட்டுக்கு ஆறாயிரப்படியவதாரிகை. கைவல்யார்த்திகளென்கிற பதமும் இப்பாட்டில் இல்லை, அவர்கள் துணையல்லர் என்பதைத் தெரிவிக்கும் வாசகமும் இதில் வியக்தமாக இல்லை, ஆழ்ந்து நேரக்குதலில் கிடைக்குமிது. சரணமாகிய நான் மறைநூல்களுஞ் சாராதே என்றது –க்ஷுத்ரப்ரயோஜ்னங்களை விதிக்கும் முகத்தால் நமக்குத் தஞ்சமாகிய வேதசாஸ்த்ரங்களைப் பற்றி க்ஷத்ரப்ரயோஜனங்களை விதிக்கும் முகத்தால் நமக்குத் தஞ்சமாகிய வேதசாஸ்த்ரங்களைப் பற்றி க்ஷுத்ர பலன்களை ஸபித்துப் போகாதே என்றபடி. இது வொருநன்மையே, இந்த நன்மைக்குமேல் மற்றொரு நன்மையுமுண்டு, அது, கரணப்பல்படை யென்று தொடங்கிப் பின்னிரண்டடிகளாற் சொல்லப்படுகிறது. விரோதி நிரஸனத்தில் வல்லவனான திருவாழியாழ்வானைத் தாங்கியுள்ள எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தல் கைவல்ய நிஷ்டர்களுக்குமுண்டே, ஸாதநாநுஷ்டான தசையில் பகவத் ப்ராப்திகாமர்களுக்குப் போலே ஆத்மப்ராப்திகாமர்களுக்கும் பகவத்பஜனமுண்டாகையாலே. ஆக, சரணமாகிய நான்மறைநூல்களும் சாராமலிருந்தும் ஈசற்கு ஆளாகியிருந்தும் மரணம் தோற்றம் வான்பிணிமூப் பென்றிவைமாய்த்தலாகிற ஜராமரணமோக்ஷிமே தவிர, பகவத் கைங்கர்ய ப்ராப்தியென்பது கேவலர்க்குக் கிடையாமையாலே அவர்களையும் க்ஷேபித்தாராயிற்று. மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென்றிவைமாய்த்தீர்களே தவிர, வேறு அத்தாணிச் சேவகம் பெற்றீர்களில்லையே, ஆகையாலே நீங்களும் எனக்குத் துணையல்லீர் என்றதாக முடிந்தது. கரணப்பல் படையித்யாதிக்கு இரண்டுவகையாகப் பொருள் நிர்வஹிப்பதுண்டு கரணம் என்று உபகரணங்களைச் சொன்னபடியாய், யுத்தத்திற்கு வேண்டிய உபகரணங்களை யுடைத்தாய்ப் பலவகைப்பட்டதான படை –சத்ருக்களின் சேனையானது, பற்று அறமிச்சமில்லாமே, ஓடும்படி கனல்நின்ற திருவாழி –என்பது ஒரு வகையான பொருள். (2) கரணம் என்று இந்திரியங்களுக்கும் பேராகையாலே, கரணப்பல்படை –இந்திரிய ஸமூஹமானது, பற்று அற-விஷயங்களில் பற்றற்று மீளும்படியாக, என்று மற்றொரு பொருள். இப்பொருளில், பற்றற என்பது ஆளாயே என்பதில் அந்வயிக்கும் “ஓடுங்கனலாழியரணத்திண்படை யேந்திய ஈசற்கு, கரணப்பல்படைபற்றற ஆளாயோ” என்று இங்ஙனே அந்வ்யங்காண்க.

English Translation

Without ever learning the sacred Vedic Chants, we have cut attachments and destroyed the woes of birth, death, old age and disease, by simply serving the radiant discus-Lord who is our fortress of strength

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்