விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங்கும் இங்கும்*  வானவர் தானவர் யாவரும்* 
    எங்கும் இனையைஎன்று*  உன்னைஅறியகிலாதுஅலற்றி*
    அங்கம்சேரும்*  பூமகள் மண்மகள் ஆய்மகள்* 
    சங்குசக்கரக் கையவன் என்பர்*  சரணமே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உன்னை இனையை என்று அறியகிலாது அலற்றி - உன்னை உள்ளபடி அறியப்பெறாது எதையோ சொல்லிக் கூப்பிட்டு
பூமகள் மண்மகள் ஆய் மகள் - ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி யென்னும் தேவிமார்
அங்கம் சேரும் - திருமேனியில் சேர்ந்திருக்கப்பெற்றார்களென்றும்.
சங்கு சக்கரம் கையவன் - திருவாழி திருச்சங்குகளைத் திருக்கையிலேந்தியபெருமான்
சரணம் என்பர் - நம்முடைய ஆபத்துக்களைப் போக்கவல்லவன் என்றும் ரக்ஷ்கத்வ மாத்ரத்தையே அநுஸந்தித்திருப்பர்கள்.

விளக்க உரை

அங்குமிங்கும் எங்கும் வானவர்தானவர்யாவரும் உன்னை இனையையென்று அறியகிலாது – மேலுலகங்களிலும் கீழுலகங்களிலும் மற்றுமுள்ள எவ்விடங்களிலுமிராநின்ற அநுகூலர்களான வானவர்களும் பிரதிகூலர்களான தானவர்களும், இவ்விரண்டுவகுப்பிலும் சேர்ந்தவர்களான மநுஷ்யாதிகளுமான யாவரும் எம்பெருமானே, உன்னை இப்படிப் பட்டவனென்று அறியாமல் என்றபடி. உன்னுடைய ஸௌகுமார்யத்தை யறியாதவர்களாய் என்பது கருத்து ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் இப்போது அவனுடைய ஸௌகுமார்யமே உறைத்திருப்பதனாலும், அதனாலேயே தாம் அவன் பக்கலிலே பரியத்தேடுகையாலும் யமே உறைத்திருப்பதனாலும், அதனாலேயே தாம் அவன் பக்கலிலே பரியத்தேடுகையாலும் இவ்விடத்தில் இனையையென்று உன்னையறியகிலாது என்பதற்கு இதுவே பொருளாகத்தகும். “கருமுகை மாலைபோலேயிருக்கிற உன்படியறியாதே“ என்பது ஈடு. எம்பெருமானுடைய ஸௌகுமார்யத்தை அவர்கள் அறியாதே செய்கிற காரியம் என்னவென்றால் (சரணமே யென்பர்) எம்பெருமானுக்கு ரக்ஷையிடப்பாராதே அவன் பக்கல் நின்றும் தாங்கள் ரக்ஷைபெறப்பார்ப்பர்கள். இன்னமும் அவர்கள் செய்வதெனென்னில், “பூமகள் மண்மகள்ளாய் மகள் அங்கஞ் சேரும், சங்கு சக்கரக்கையவன்“ என்றும் சொல்லுவர்கள், இப்படிச் சொல்வது நன்றுதானே, இதல் பிறகு ஒன்றுமில்லையே, இதை நித்தனைக்கு உறுப்பாக்குவதேன? என்னில், வாயற் சொல்லுகிறமகளோடுண்டான் சேர்த்திக்கும் சங்கு சக்கரக்கையவனான இருப்புக்கும் பல்லாண்டு பாடுகிறவர்களாயக் கொண்டு அந்த வாசகங்களைச் சொன்னார்களாகில் நன்றே, பல்லாண்டு பாடும்படியான பரிவு அவர்களுக்கு இல்லையே, தங்களுடைய இஷ்டப்ராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் உறுப்பாக புருஷகார பூதர்களும் திவ்யாயுதங்களு முண்டு என்று ப்ரயோஜனத்தில் விருப்பத்தாலே சொல்லுகிற வாசகமாகையாலே அதுபற்றி ஆழ்வார் க்ஷேபித்துக் கூறுகின்றாரென்க. அலற்றி – “ஐயோ! எம்பெருமானுக்கு என் வருகிறதோ!“ என்று வயிறெரியாதே அவனுடைய ரக்ஷகத்வத்தையும் சக்திபூர்த்தியையுஞ் சொல்லுகிற வசனங்களைக் கொண்டு அவற்றுவர்களாம் அவர்கள். * வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு * என்று அச்சேர்த்திக்கு மங்களா சாஸனம் பண்ணுவாரில்லை, கையும் திருவாழியுமான அழகை அநுபவிக்க இழிவாரில்லை, நம் விரோதிகளைத் துணித்து நம்மை ரக்ஷிக்கைக்கு வேண்டுவனவுண்டெள்று இவ்வளவே நினைத்து ஏதோ சப்தாசிகளை யலற்று கிறார்களே யென்று வருந்தியருளிச் செய்தாராயிற்று. ஆறாயிரப்படியருளிச் செயல் – “ஸ்வர்க்காதிலோகங்களிலும் இந்த லோகத்திலும் மற்று மெங்கும் வர்த்திக்கிற தேவதாநவப்ரப்ருதி ஸமஸ்தாத்மாக்களும், ஏவம்பூதனென்று உன்னையுள்ளபடி யறியாதே, லக்ஷ்மீபூமி நீளரநாயகனாய் சங்கசக்ரகதாதரனாய் பரமப்ராப்யனாயிருந்த வுன்னைத் தங்களுக்கு உபாயமென்பர், ஆதலால் எனக்கு அவர்கள் துணையல்ல ரென்கிறார்.“

English Translation

O Lord bearing a conch and discus, with Lotus, Dame, Earth Dame and Nappinnai blending in you! Gods and Asuras everywhere worship you and seek refuge in you, but fall to fathom you

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்