விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காண்கொடுப்பான்அல்லன் ஆர்க்கும் தன்னை*  கைசெய்அப்பாலதுஓர் மாயம்தன்னால்* 
    மாண்குறள் கோலவடிவுகாட்டி*  மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*
    சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த*  தேவபிராற்கு என் நிறைவினோடு* 
    நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்*  என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆர்க்கும் - எப்படிப்பட்ட பேரளவுடையார்க்கும்
தன்னை காண் கொடுப்பான் அல்லன் - தன்னைக் காணக் கொடாத வனாயிருந்து வைத்து
மாயம் தன்னால் - தனது வஞ்சனத்தினாலே
கை செய் அப்பாலது ஓர் - அக்ருத்ரிம்மாய் அத்னிதீயமான
கோலம் மாண் குறள் வடிவு - ஸௌந்தரியத்தையுடைய  யாசகவாமன வேஷத்தை

விளக்க உரை

கடைபறப்பாசங்கள் விட்ட பின்னையன்றி அவனவைகாண் கொடானே * என்று கூறின தலைவியைநொக்கி நங்காய்! எங்களோடு உறவை வேணுமாகில் நீ விட்டுத் தொலைக்கலாமேயொழிய அவன் காட்சி கொடுப்பதென்பது சொல்ல, எல்லாம் பண்டே இழந்தாயிற்றன்றோ, இன்னமும் இழக்க என்னவிருக்கிறது? என்று அவர்களுக்குச் சொல்லுகிறாள். (தன்னை ஆர்க்கும் காண்கொடுப்பானல்லன்) தமது முயற்சியினால் காண நினைப்பார் எத்தனை சிறப்புப் பெற்றவர்களாயிருந்தாலும் அவர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொடுக்குமியல்வின்னல்லன் எம்பெருமான். இது தாய்மாருடைய வார்த்தையின் அநுவாதமிருக்கிறபடி. அவன் துர்லபன் என்றன்றோ நீங்கள் சொல்லுகிறீர்கள், ஆமாம், அவன் துர்லபனென்றே கொள்ளுங்கோள் என்று அப்யுபகம்யவாதம் பண்ணுகிறபடி. துர்லபனென்று “காணகொடுப்பானல்லன் ஆர்க்குந்தன்னை“ என்று இசைந்து சொல்லிவிடுவதனால் லாபமில்லையே யென்னில், லாபமோ நஷ்டமோ, அந்த விசாரம் இங்கில்லை. “இன்னமும் ஆத்மாத்மீயங்களே நீ இழக்கவேபோகிறாய்“ என்று தாய்மார்கள் சொன்னதற்கு வலிதாக விடை கூறுவது மேல் முழுவதும். எந்த வடிவைக் காட்டி மஹாபலியின் ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொண்டானானபின்பு, இன்னமும் அவன் கொள்ளை கொள்ளத்தக்கதாய் நான் இழக்கத் தக்கதாய் என்ன இருக்கிறது என்பது கருத்து. “கை செய் அப்பாலது“ என்றது மாயத்தில் அந்வயிப்பதன்று, மாண்குறள் கோலவடிவுக்கு விசேஷணமாய் அதிலே அந்வயிக்கும். கைசெய்கைக்கு அப்பாலதான அழகையுடைய வடிவு. * ஓவியத்தெழுதவொண்ணா வுருவத்தாய்! * (கம்பர்) என்றபடி சித்திரத்திலும் எழுத வொண்ணாதபடி மிக அற்புதமாயமைந்த ஒப்புயர்வற்ற அழகையுடைய வடிவைக்காட்டி யென்றபடி. உபயவிபூதி நாதனான தான் ஒன்றுமில்லாதான் போலே யாசகனாய் வருகையும், சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்து கொள்ளுகையும் ஆகிய மாயத்தை நினைத்து, மாயந்தன்னால் எனப்பட்டது. மாவலி பரம சந்தோஷத்துடனே நீர்த்தாரையைக் கையில்விட, கையிலே நீர் விழுந்தவளவிலேயே ஸமஸ்த லோகங்களும் விம்மவளர்ந்தான், கற்பகச் சோலை பணைத்தாற்போலே திருத்தோள்கள் தழைத்தன. இந்திரனிழந்த ராஜ்யத்தை மீட்டுக்கொடுத்து அதனாலுண்டான மகிழ்ச்சி மிகுதியினால் வடிவுபுகர்பெற்று விளங்கிற்று, அப்படிப்பட்ட விலக்ஷணமான வடிவை எனக்குக்காட்டி எனது ஸர்வஸ்வமான அடக்கத்தை இழக்கக்கூடியதும் என்பாலொன்றுமில்லையே – என்றாளாயிற்று.

English Translation

O Sakhis! The Lord of celestials is hot the one to show himself easily. He came as a sweet lad, then grew and took the Earth, sky and all. He has beautiful arms of exceeding radiance and mischief, I have lost my dignity and my shame to him. So what can I lose now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்