விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இடைஇல்லையான் வளர்த்தகிளிகாள்*  பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
    உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்*  ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*
    அடையும் வைகுந்தமும் பாற்கடலும்*   அஞ்சனவெற்பும் அவைநணிய* 
    கடையறப்பாசங்கள் விட்டபின்னை*  அன்றி அவன்அவை காண்கொடானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடையும் - இங்கிருந்து சென்று சேர்ந்த
வைகுந்தமும் - திருநாடும்
பால் கடலும் - திருப்பாற்கடலும்
அஞ்சனம் வெற்பும் அவை - திருவேங்கடமலையுமாகிய அத்தலங்கள்
நணிய - அருமையற்று எளியவையே (ஆனால்)

விளக்க உரை

“பூவைகள்“ என்னும் பன்மைச்சொல்லின் மேல் விளியுருபு ஏறினால் “பூவைகாள்“ என்றாகும், “பூவைகள்காள் என்றாவதற்கு வழியில்லை எனினும், வடமொழி வேதத்தில் வரும் பலவகைப் பிரயோகங்களைச் “சாந்தஸத்வாத் நதோஷ“ என்பதுபோல இங்குங்கொள்க. “பூவைகாள்“ என்றே பாடமென்று சிலர் சொல்லுவது அஸம்பிரதாயம். “உடையம்“ என்றதை மாற்றி “நம்முடைய“ என்று கொள்வது. நம்மிடத்தில் ஸர்வஸ்வாபஹாரம் பண்ணினானென்கிறது இரண்டாமடி. கொண்டான் என்றது வினைமுற்றன்று, வினையாலணையும் பெயர், மூன்றாமடியின் முதலிலுள்ள அடையும் என்பதில் அந்வயிக்குமது, கொண்டானடையம்வைகுந்தமும் என்க. இத்தலையிலுள்ளதெல்லாம் நேராகக்கொண்டு எட்டவொண்ணாத நிலத்திலேபோய்ப் பாரித்து வெற்றிகொண்டாடியிருந்தானென்கை“ என்பது ஈடு. என்னையு மென்னுடைமையையுங் கொள்ளைக்கொண்டு அவன் பரமபதத்திலோ திருப்பாற்கடலிலோ * சேணுயர்வானத்தோடொத்தான * சேணுயர்வேங் கடத்திலோ சென்று சேர்ந்தாலும் (அவை நணிய) அவை நமக்குக் கிட்டத்தகாதவையல்ல, ஸமீபஸ்தங்களே என்கிறார். “நண்ணிய“ என்பது “நணிய“ என்று தொக்கிக் கிடக்கிறது. நண்ணத்தகுந்தவையே என்றபடி. அப்படியானால் அநுபவம் கிடைக்கவில்லையேயென்று அழுவானேன்? கிட்டியநுபவித்துச் சளிக்கலாகாதோவென்ன, அதற்கு உத்தரமுரைக்கிறார் கடையறப்பாசங்கள் விட்ட பின்னையன்றி அவனவைகாண்கொடானே என்று. இங்கே ஈடு, “அவன் சுணையுடையவன், புறம்பேஞமொருவிஷயத்திலே நசைகிடக்க ஸ்வாநுபவத்தைக் காட்டிக்கொடான், பின்னாட்டாதபடி ஸவாஸநமாக பாஹ்யருதிபோனாலல்லது போகஸ்தானங்களைக் காட்டிக் கொடான்“. என்று ஆறாயிரப்படி ஸ்ரீஸூக்திகாண்மின், -“அவன் நம்முடைய நிறமும் வளையும்நெஞ்சும் தொடக்கமாகவுள்ள ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக்கொண்டு போனானாகிலும், பரமப்ராப்யமான திருநாடும் திருப்பாற்கடலும் திருமலையும் தன்னையாசைப்பட்டார்க்குக் காணநணியவாகில் காட்டாதொழிவானென்னென்னில், உங்கள் பக்கலுள்ள ஸங்கம் நிச்சேஷமாகப் போனாலல்லது அவனவை காண்கொடான், ஆதலால் இனி உங்களோடு முறவில்லையென்கிறார்.“ என்று.

English Translation

Out, out, my pet Mynahs, Parrots, my koels and my peacocks! He has stolen my health, wealth, heart and all else to the last bit. He resides in fair Vaikunta, in Milk Ocean and on Venkatam hill. Till my last remaining passions leave me, he will not see me, so get out!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்